ஹிஜாப் விவகாரத்தில் எச் ராஜா போட்ட பதிவு – 2019ல் இந்து மாணவர்களுக்கு ஆதரவாக அவர் போட்ட பதிவை வைத்து விமர்சிக்கும் நெட்டிசன்கள்.

0
606
Hraja
- Advertisement -

ஹிஜாப் விவாகரத்தில் எச் ராஜா கருத்து தெரிவித்த நிலையில் அவர் பதிவிட்ட பழைய பதிவு ஒன்றை நெட்டிசன்கள் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். கர்நாடகாவில் பெரும்பாலான கல்லூரிகளில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்ற சம்பவம் இந்தியா முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்லாமிய மாணவ, மாணவிகள் குல்லா, பருதா, புர்கா அணிந்து கல்லூரிக்கு வர கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தும் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறார்கள். இதனை அடுத்து வகுப்பறைக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

-விளம்பரம்-

இதனை எதிர்த்து மாணவிகள் பல நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். பின் இது தொடர்பாக உயர் நீதி மன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என்று கூறி இந்துத்துவா மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். சில மாணவிகள் காவி துப்பட்டா அணிந்து வந்தனர்.இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் மத ரீதியாக பிரச்சனை நிலவியது.

- Advertisement -

மாணவர்களிடையே கிளம்பிய பிரச்சனை :

பின் மாணவ, மாணவிகள் பொதுவான சீருடையை அணிந்து வர வேண்டும் என்று மாநில அரசு அதிரடி உத்தரவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த நிலையில் இதற்கு பதில் காவி அணிந்து வந்த மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கர்நாடகாவில் இருக்கும் சிவமொக்கா, உடுப்பி, மங்களூர், சிக் மங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பியு கல்லூரிகளில் இந்த மோதல் ஆர்ப்பாட்டமாக நிலவியிருக்கிறது.

ஹிஜாப் விவகாரத்தில் எச். ராஜா :

இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் பா ஜ க ஆதரவாளர்கள் பலரும் பள்ளிகளுக்குள் ஹிஜாப் அணியக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக பா ஜ க அணியின் முக்கிய உறுப்பினரான எச்.ராஜா இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘பள்ளி சீருடையை அணிய விரும்பாதவர்கள் பள்ளியை விட்டு வெளியேறி மதரசாவில் சேருவது நல்லது’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

எச் ராஜாவின் பழைய பதிவு :

பொதுவாக எச் ராஜா சமூக வலைத்தளத்தில் பதிவிடும் பெரும்பாலான பதிவுகள் விமர்சனங்களுக்கு உள்ளாகிவிடும், அந்த வகையில் எச் ராஜாவின் இந்த பதிவும் தற்போது நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமே கடந்த 2019 ஆம் ஆண்டு எச். ராஜா, இந்துக்கள் குறித்து போட்ட பதிவு தான். கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் விதவிதமான நிறங்களில் கையில் கயிறுகள் கட்டியிருக்கிறார்கள். மஞ்சள், சிவப்பு, பச்சை, காவி நிறங்களில் கயிறுகள் கட்டுகிறார்கள்.

2019 ஆம் ஆண்டு எழுந்த பிரச்சனை :

இதன்மூலம் இந்தக் கயிறுகள் அணிந்திருக்கும் மாணவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது எனத் பள்ளிக் கல்வி துறைக்கு புகார்கள் வந்தன. இந்தப் புகாரின் மீது பள்ளிக்கல்வி துறை விசாரணை நடத்தியது. மாவட்ட கல்வி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மாணவர்கள் கயிறுகளைக் கட்டி வரும் பள்ளிகளைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது மேலும், நெற்றியில் திலகமிட்டிருக்கிறார்கள். தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி என தங்களின் ஜாதி அடையாளத்தை காட்டுவதற்காக இவ்வாறு அணிந்துள்ளனர். இதனால், மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுகிறது. இதுபோன்ற விஷயங்களை பள்ளிகளில் அனுமதிக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறையின் இயக்குனர் கண்ணப்பன் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார்.

இந்துக்ளுக்கு ஆதரவாக பேசிய எச் ராஜா :

இதற்கு பலர் ஆதரவு தெரிவித்த நிலையில் இந்த சுற்றறிக்கைக்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் ‘கையில் கயிறு கட்டுவது, நெற்றியில் திலகமிடுவது இந்துக்களின் பழக்கம். எனவே இந்தச் சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும். மற்ற மதத்தினர் மத அடையாளங்களுக்கு ஏன் இயக்குநர் தடை விதிக்கவில்லை. இந்து மத உணர்வுக்கு எதிராகச் செயல்படும் பள்ளிக்கல்வி இயக்குநரை முதல்வர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இச்சுற்றறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் மாணவர்களுக்கு கயிறு கட்டும் போராட்டம் நடத்தப்படும்’ என்றும் கூறி இருந்தார். எச் ராஜாவின் இந்த இரண்டு விதமான கருத்துக்களால் நெட்டிசன்கள் பலர் உங்களுக்கு வந்தா ரத்தம் அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement