பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய அங்கம் வகித்து வருபவர் முன்னாள் MLA எச். ராஜா. இவர் அவ்வபோது சர்ச்சை கூறிய வகையில் கருத்து தெரிவித்து கூறி வருவார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துரில்  கடந்த 2018ஆம் ஆண்டு இந்து முன்னணி பொதுகூட்டத்தில் அவருடைய உரையை ஆற்றினார். அப்போது அவர்  இந்து அறநிலைதுறை அதிகாரிகளையும் மற்றும் பணியாளர்களையும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்களையும் மிகவும் விமர்சித்து தரக்குறைவாக பேசினார்.

இது குறித்து வேடச்சதூர் நாகர்கோவில் என தனி தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஏழு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் பெரியார் சிலையை உடைப்பு குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தது தொடர்பாகவும் ஹெச்.ராஜா மீது தந்தை பெரியார் திராவிட கழகம் புகார் அளித்தது உள்ளது. அந்த புகாரின் பேரில் அவர் மேல் மூன்று  வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் திமுகவின் துணை பொதுசெயலாளர் கனிமொழி கூறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்தற்கும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில்  பதியப் பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்க கூடிய 11 வழக்குகளையும் ரத்து செய்ய கோரி எச்.ராஜா சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது இன்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது ஹெச்.ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி பால் கனகராஜ்  அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்கள் அனைத்தும் செவிவழி செய்தி தான் அதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என வாதிட்டார். பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என ஹெச்.ராஜா தான் ட்வீட் போட்டார் என எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் வாதிட்டார். கனிமொழி எம்.பி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து மட்டுமே.

Advertisement

இது குறித்து அவர் புகார் அளிக்காத நிலையில் மூன்றாம் நபர் தான் வழக்கு தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறி அணைத்து வழக்குகளையும் ரத்து செய்ய கோரிக்கை விடுத்தார். காவல் துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கு அறிஞர் முத்து மீரான் ஆஜராகி அவருடைய பேச்சுக்கள் தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் பாதிக்கும் வகையில் அவரது பேச்சுகள் இருக்கிறன்றது  மற்றும் பெண்களை இழுவு படுத்தும் வகையிலும் இருக்கிறது என்றும் வாதிட்டார்.

Advertisement

அனைத்தையும் கேட்டறிந்த பின்னர்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘பெண்களைக் குறி வைத்து அவதூறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருமுறை இல்லை. பலமுறை இது போன்று அவர் பேசியுள்ளார் என கண்டனம் தெரிவித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.     

Advertisement