ஷூட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தை பேசிட்டேன், அதுக்கு அஜித் – எச். வினோத் சொன்ன செம தகவல்.

0
528
vinoth
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் பெண்களிடமும் நல்ல ஆதரவைப் பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இயக்குனர் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். மேலும், வலிமைப்படத்தின் அப்டேட்டுகள் சோஷியல் மீடியாவில் வருவதால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள்.

-விளம்பரம்-

பின் பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால், சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. வலிமைப்படுத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் வினோத் குமார் வலிமை படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? எப்படி சமாளிப்பது? என இதையெல்லாம் வலிமை படத்தில் அஜித் செய்திருக்கிறார். போலீஸ் உடை அணியாமலேயே போலீஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் வினோத் அளித்த பேட்டி:

இதற்கு முன் அவர் நடித்த படங்களில் வராத அளவிற்கு ஆக்சன் காட்சிகள் உள்ளது. அதோடு இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக சென்னை சினிமா ஃபைட்டர் யூனியன், பெங்களூரு, கோவை, மும்பை, ரஷ்யா என பைக் ரைடில் பயிற்சி பெற்ற குழுவினர் வந்திருந்தார்கள். அதிலும் 150 கிலோ மீட்டரில் பைக் ஓட்டுவதை காட்சிப்படுத்துவது சவாலாக இருந்தது. இதற்கு எங்களுக்கு உதவியாக இருந்தது வெங்கி. இவர் தான் அஜித் அடிபட்ட காட்சிகளையெல்லாம் வீடியோவாக எடுத்து இருந்தார். அஜித் அவர்கள் அடிபட்டது எல்லோருக்கும் பயங்கர பதட்டமான ஒன்று.

vinoth

அஜித்துடன் அடுத்த படம் பற்றிய தகவல்:

அவருக்கு பெரிய காயம் ஏற்பட்டிருந்தால் அடுத்த நாள் 500 பேருக்கு வேலையே இருந்திருக்காது. தயாரிப்பாளர், ரசிகர்கள், வேலையாட்கள், தொழிலாளர்கள் என பல பேருக்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், அடுத்த நாளே அஜித் தனக்கு அடிபட்டதை கூட பொருட்படுத்தாமல் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டார். மேலும், இந்த படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையும் அஜித்துடன் கூட்டணி செய்ய இருக்கிறோம். அடுத்த படத்தில் அவருக்கு நெகட்டிவ் கதை. கரு மட்டும் கூறியிருக்கிறேன். வலிமை படத்துக்கு பிறகு தான் அடுத்த படத்திற்கான வேலைகள் தொடங்கும். முதல் படத்தில் தான் கதை எழுதி ஹீரோ தேடினேன்.

-விளம்பரம்-

வலிமை படம் வெளிநாட்டில் எடுக்க காரணம்:

அடுத்தடுத்த படங்களில் ஹீரோக்களுக்கு கதை எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதேபோல் நாங்கள் ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்தியதற்கு காரணம், பிரான்ஸ், ஸ்பெயின் என திட்டமிட்டு ப்ரொபஷனல் பைக் ரைடர்ஸ் இருந்தார்கள். அதனால் தான் ரஷ்யாவில் எடுத்தோம். ட்ரெய்லரில் காட்டியபடி வரும் பைக்கில் பறந்த காட்சிகள் எல்லாம் அங்குதான் எடுத்தது. ரசிகர்கள் மத்தியில் அந்த காட்சிகளுக்கு செம வரவேற்பு கிடைத்தது. படத்தில் யுவன் இசையும் பட்டைய கிளப்பி இருக்கிறது. அதுவும் படத்தில் வேற மாரி பாடல், அம்மா பாடல் என எல்லாம் ஒரே வாரத்தில் ரெடி பண்ணி கொடுத்தார். இதற்காக விக்னேஷ் சிவனை வர வைத்திருந்தார்.

அஜித் பற்றி வினோத் கூறியது:

ஆனால், விக்னேஷ் சிவன் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. அந்த பாடல்கள் எல்லாம் இன்னும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி தான் வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமாகுரேஷி நடித்திருக்கிறார். மேலும், நேர்கொண்ட பார்வை அஜித் எனக்கு கூறியது. ஆனால், வலிமை ஒன்லைன் மட்டும் தான் நான் கூறினேன். அவர் கதையை கேட்காமல் ஒரு வரியை கேட்டு படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார். அதற்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கும் போது தான் கதையை கேட்க ஆரம்பித்தார். பின் படப்பிடிப்பில் இதுதான் கதையா என்று சிரித்துக்கொண்டே கேட்பார். கதை தெரியாமல்தான் படத்தில் அஜித் நடிக்க ஒப்புக் கொண்டார்.

கெட்ட வார்த்தை பேசியதால் அஜித் சொன்ன விஷயம் :

ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் அஜித் ஒரு நல்ல மனிதர். பெண்கள் மீது அதிக அக்கரை, மரியாதை கொண்டவர். தொழிலாளிகள், ரசிகர்கள் மீது அக்கறை உடையவர். ஒருமுறை நான் கெட்ட வார்த்தை பேசிய போது இந்த மாதிரி பேசாதீர்கள் என்று அறிவுரை கூறினார். அந்த அளவிற்கு ரொம்ப தங்கமான மனிதர். அதேபோல் தயாரிப்பாளர் போனி கபூர் 40 படங்களை தயாரித்திருக்கிறார். அவர் ஒரு விஷயம் எடுத்தால் பிளஸ் மைனஸ் இரண்டுமே பேசுவார். படத்துக்கு 15 பைக் தலா ஒன்றரை இலட்சத்திற்கு கார்கள், பஸ், லாரி வாங்கி தந்தார். கொரோனாவிலும் அனைவருக்குமே சம்பளம் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் ரசிகர்களை மனதில் வைத்துதான் இந்த வலிமையை உருவாக்கினோம். முதல் பாதி இன்வெஸ்டிகேஷன், இரண்டாம் பாதி ஆக்ஷன் சென்டிமென்ட் என்று ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் உருவாகி உள்ளது. கூடிய விரைவில் படம் வெளியாகும். ரசிகர்கள் எதிர்பார்ப்பை வலிமை படம் பூர்த்தி செய்யும் என்று என்று கூறியிருந்தார்.

Advertisement