1994 ஆம் ஆண்டே துணை இயக்குனராக பணியாற்றியுள்ள வினோத்.! யாரிடம் பாருங்கள்.!

0
2131
h-Vinoth
- Advertisement -

தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தரமான படம் என்ற அங்கீகாரத்தை பெற்றது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் இயக்குனர் எச் வினோத. தற்போது அஜித்தை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for director vinoth

தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பிடித்தார் வினோத். அந்த பாடதிற்கு பின்னர் இவர், கார்த்திகை வைத்து இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படமும் தமிழ் ரசிகர்களால் பேசப்பட்டது. அந்த படத்திற்கு பின்னர் இவர் மீதான எதிர்பார்ப்பும் கூடியது.

இதையும் பாருங்க : பாத்திமாவை சைட் அடித்த சாண்டி.! கடுப்பான பாத்திமா.! நேற்றைய நிகழ்ச்சியில் நீக்கப்பட்ட காட்சிகள்.! 

- Advertisement -

இயக்குனர் வினோத் நேரடியாக தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கவில்லை. ஹெச்.வினோத் 1994ஆம் ஆண்டே பார்த்திபன் இயக்கிய சரிகமபதநி படத்தில் துணை இயக்குநராக பணி புரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து புள்ளக்குட்டி என்ற பார்த்திபன் படத்திலும் வினோத் துணை இயக்குநராக பணி புரிந்துள்ளார். மேலும் விஜய் மில்டனிடமும் துணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார் வினோத். 

Image result for director vinoth

அதன் பின்னர் பல ஆண்டுகள் சினிமாவில் இயக்குனராக வர வேண்டும் என்ற கனவுடன் இருந்த வினோத்திற்கு ஒரு துவக்கப்புள்ளியாக அமைந்தது தான் ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம். தற்போது அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தையும் இயக்கியுள்ளார் வினோத்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு பின்னரும் அஜித்தை வைத்து இயக்க உள்ளார் வினோத். அந்த படத்தில் தல அஜித் ஒரு கார் ரேஸராக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. மேலும், தனது முதல் படமான சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கதையை மட்டும் எழுதி வருகிறார் வினோத். ஆனால், அந்த படத்தை வேறு ஒரு இயக்குனர் இயக்க இருக்கிறாராம்.

Advertisement