கலைஞரின் மறைவால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு.!

0
236
Hansika

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கடந்த செய்வாய் கிழமை (ஆகஸ்ட் 7 ) காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கலை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

kalainjar

கலைஞர் அவர்களின்  மறைவுயொட்டி விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ போன்ற பல்வேறு திரைப்பட படப்பிடிப்புகளும் நேற்று (ஆகஸ்ட் 8) நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழின் முன்னணி நடிகையான ஹன்சிகா, கலைஞர் அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக தனது பிறந்தநாள் அன்று திட்டமிட்டிருந்த ஒரு கொண்டாடத்தை தள்ளி வைத்துள்ளார்.

தென்னெந்திய நடிகையான ஹன்சிகா தற்போது ‘துப்பாக்கி முனை’ , ‘100 ‘  என்ற இரண்டு தமிழ் படங்களில் கமிட் ஆகியுள்ளார். இதுவரை 49 திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஹன்சிகா இன்று (ஆகஸ்ட் 9) தனது 26 பிறந்தநாளை கொண்டி வருகிறார். இந்நிலையில் தனது பிறந்தநாளை ஒட்டி தான் நடிக்கவிருக்கும் 50வது படத்தின் தலைப்பை இன்று நடிகர் தனுஷ்யை வைத்து அறிவிக்க திட்டமிட்டிருந்தார்

ஆனால், கலைஞர் அவர்களின் மறைவினால் தமிழகம் இன்னும் சோகத்தில் உள்ள நிலையில் தனது படத்தின் தலைப்பு வெளியீட்டை தள்ளி வைத்துள்ளார் நடிகை ஹன்சிகா. மறைந்த தலைவருக்காக தனது தனிப்பட்ட கொண்டாடத்தை தள்ளி வைத்துள்ள ஹன்சிகாவின் இந்த செயல் அவரது ரசிகர்களை பெரிதும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.