தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் ஹவா என்ற பாலிவுட் படத்தின் குழந்தை நட்சித்திரமான அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, விஷால், தனுஷ் என பல நடிகர்களும் நடித்து தமிழ் சினிமாவை ஒரு சுற்று சுற்றினார். அதற்கு பிறகு சமீப காலமாக பெரிதாக நடிக்காமல் இருந்த ஹன்ஷிகா மஹா என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.
மஹா படம் :
தமிழ்நாட்டில் சமீப காலமாக பெண்கள் கடத்தல் பற்றி அதிகமான திரைப்படங்கள் வந்த படியாக இருக்கிறது. இந்த வகையில் இயக்குனர் யு ஆர்.ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்ஷிகா, ஸ்ரீகாந்த், சிம்பு போன்றவர்கள் நடித்த படம் தான் இந்த மஹா. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இப்படம் நினைத்த அளவிற்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை என்றாலும் இப்படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 7 படங்களால் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
திருமணம் :
இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவின் திருமணம் எப்போது என்று அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில் நடிகை ஹன்ஷிகா தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்து கடந்த வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஒரு வாரம் கோலாகலமாக நடந்தது. அதற்கு பிறகு ஹனிமூன் சென்ற ஹன்ஷிகா தற்போது மீண்டும் சினிமா துறைக்கு திரும்பியுள்ளார்.
லவ் ஷாதி டிராமா :
இந்த நிலையில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகும் “லவ் ஷாதி டிராமா” என்ற தொடரில் தன்னுடைய சினிமா வழக்கை, காதல், திருமணம் போன்றவற்றை பற்றி பேசியிருந்தார். சமீபாத்தில் கூட கூட தன்னுடைய தோழியை கணவரை திருமணம் செய்து கொண்டதாக ஷோசியல் மீடியாவில் எழுந்த புகாரை பற்றி பேசியிருந்தார். அதோடு ஹன்சிகா வேகமாக வளர ஊக்கமருந்து செலுத்தினார்கள் என்ற வந்த்திக்கு மூன்றுபுள்ளி வைக்கும் வகையில் சில கருத்துக்களை கூறியிருந்தார்.
1 நிமிடத்திற்கு 5 லட்சம் ரூபாய் :
இந்த நிலையில் தான் ஹன்ஷிகாவின் கணவர சோகைல் கதுரியாவின் குடும்பத்தினரிடம் ஒரு நிமிடத்திற்கு 5 லட்சம் கேட்டதாக கூறியது அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நாசிகை ஹசன்ஷிகாவின் தயார் மோனா மோத்வானி, ஹன்ஷிகா கணவர் சோஹேலின் அம்மாவிடம் விழாக்களுக்கு தாமதமா வருவதை பார்த்து தாமதமாக வரும் ஒவ்வொரு நிமிடத்திற்கு சுமார் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் ஹன்ஷிகா தாய் மோனா மோத்வானி. இந்த தகவல் நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக வைரலாகி வருகிறது.