என்னது, அவருக்கு நான் ஜோடியா.! அதிர்ந்து போய் ட்வீட் போட்ட முன்னணி நடிகை.!

0
4584
saravana
- Advertisement -

சென்னையில் உள்ள பிரபலமான கடைகளில் சரவணா ஸ்டோரூம் ஒன்று . சென்னை தி. நகரில் தொடங்கி சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் சரவணா ஸ்டோர் இயங்கி வருகிறது. மேலும், இந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளருக்கு படத்தில் ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானியும் பதில் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

சென்னையில் பிரபலமாகவும், அதிக வசூல் வேட்டையும் தந்து கொண்டிருக்கும் ஸ்டோர்ஸ் சரவணா ஸ்டோர்ஸ் துணிக் கடை. இங்கு துணிகள் மட்டுமில்லாமல் நகை, வீட்டிற்கு தேவையான அனைத்து உபயோகமான பொருள்களும் இவர்கள் விற்பனை செய்கிறார்கள். மேலும், சில வருடங்களாகவே இந்த நிறுவனத்தின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், சில ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சரவணன் அருள் என்பவர் விளம்பரங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த விளம்பரங்கள் குறித்து பல விமர்சனங்களும், கிண்டலும், கேலியும் இணையங்களில் எழுந்து வந்தாலும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை.

இதையும் பாருங்க : லாஸ்லியா பைனலிஸ்ட்னு ஏறியுதா.! கமன்ட் செய்த கவின் ரசிகருக்கு சாக்ஷியின் பதிலை பாருங்க.!

- Advertisement -

மேலும், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் ஹன்சிகா, தமன்னா ஆகியோருடன் அருளும் விளம்பரங்களில் நடித்து வந்தார். இந்த விளம்பரம் மக்களிடையே அதிக அளவு பேசப்பட்டு வந்தது. சமீபத்தில் சரவணன் அருள் சினிமா துறை உலகில் நடிகர் சங்கம் நடத்திய விழா ஒன்றில் கலந்து கொண்டார். மேலும், இந்த விழாவில் கலந்து கொண்டதனாலோ! என்னவோ! தெரியவில்லை இவருக்கு திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.இந்நிலையில் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க முடிவெடுத்து உள்ளார் என்ற தகவல் இணையங்களில் வெளிவந்துள்ளன.

அவர் அதற்காக நல்ல கதைகளை கேட்டும் வருகிறார்.மேலும், திரைப்படங்களில் நடிக்க மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல் வெளிவந்தது . அவருக்கு கதை பிடித்த உடனே 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி விடும் என்று தெரியவந்தது. இவர் சொந்த விளம்பரத்தில் நடித்ததற்கு கடும் விமர்சனங்களும் மீம்ஸ்களும் அள்ளி குவித்தனர் ரசிகர்கள். படத்திற்கு என்ன நடக்குமோ ? தெரியவில்லை என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஆனால், அவர் என்ன நடந்தாலும் தன்னுடைய முடிவில் இருந்து பின் வாங்காமல் திரை படத்தில் நடித்தே தீருவேன் என்று விடா முயற்சியில் உள்ளார் . இதையடுத்து சரவணன் அருள் நடிக்கும் படத்தை ஜோடி- ஜெர்ரி என்ற இரண்டு இயக்குனர்கள் இயக்க உள்ளார்கள் என்ற தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

மேலும், அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டது என்று அறிவித்தார்கள். இந்த நிலையில் படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை ஹன்சிகா நடிக்க உள்ளார் என்ற பேச்சுவார்த்தை வெளிவந்தது. இதுகுறித்து ஹன்சிகா இடம் கேட்டபோது , ஹன்சிகா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது, நான் எந்த ஒரு சம்பந்தமும் தெரிவிக்கவில்லை. இது எல்லாம் உண்மையான தகவலும் இல்லை என்று கூறியிருந்தார். இதனால் அப்பாடா என்று பெருமூச்சு விட்டார்கள் ஹன்சிகா ரசிகர்கள்.

Advertisement