ச்சீ த்தூ…நீங்க சுட்டது அண்ணன்,தங்கச்சிய.! கணவர் பி.ஜே.பி-யில் இல்ல.! இருந்த பூரி கட்டைல மண்டைய ஒடச்சிருப்பேன் !

0
910
Actress-harathi
- Advertisement -

நெஞ்சை நிமிர்த்தி நிற்காதீங்க… நீங்க சுட்டுக் கொன்றது உங்க அண்ணன், தம்பி, தங்கச்சிகளை… ச்சீ த்தூ!’ – ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக இப்படி ட்வீட் செய்துள்ள நடிகை ஆர்த்தி, `நான் செம கடுப்பில் இருக்கேன்’ எனவும், `அம்மாவையே கொன்னவங்களுக்குச் சாமானிய மக்களைக் கொல்வது கஷ்டமா?’ என்றும் கேட்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

-விளம்பரம்-

Aarthi

- Advertisement -

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து டிவி நடிகை ஒருவர் வீடியோ வெளியிட்டதற்கு வழக்கு பதிவு செய்திருக்கிறார்களே?’ என்றோம். `ட்வீட்’ பண்ணிய அதே வேகத்துடன் பேசத்தொடங்கினார்.

“அந்தத் தகவலைக் கேள்விப்பட்ட பிறகுதான் நானே ட்வீட் பண்ணனும்னு முடிவெடுத்தேன். சோஷியல் மீடியாவைத் தடை பண்றது, கருத்துச் சொல்றவங்களை வழக்கு போடுவோம்னு சொல்லி மிரட்டுறதெல்லாம் பண்ணட்டும், எத்தனை நாளைக்குப் பண்றாங்கனு பார்க்கலாம். அம்மாவோட குணம், ஆளுமை, தைரியத்தைப் பார்த்து நான் அதிமுகவில் சேர்ந்தேன். அவங்க எப்போ மறைஞ்சாங்களோ, அப்பவே நானும் அந்தக் கட்சியில இருந்து விலகிட்டேன். பத்துக்கும் அதிகமான மக்களை சுட்டுக் கொன்னுட்டு மூச்சுக்கு மூச்சு அம்மாவோட அரசுனு பேசிக்கிட்டு இருக்கீங்களே, வெட்கமா இல்ல… அம்மா ஸ்டெர்லைட் கம்பெனியை மூட ஆர்டர் போட்டவங்க. அவங்க பேரைச் சொல்லி ஆட்சி நடத்துறவங்க, அந்தக் கம்பெனிக்கு எதிராகத்தானே நடவடிக்கை எடுக்கணும்… அப்பாவி மக்களைச் சுட்டுக்கொல்றீங்க?

-விளம்பரம்-

ஒரு டிவி நடிகை வீடியோ வெளியிட்டா வழக்கு போடுறீங்களே… பெரிய ஆளுங்க எத்தனைபேர் இது பற்றிக் கருத்து சொல்லியிருக்காங்களே, அவங்கமேலேயும் வழக்கு போடுங்களேன். ஊர்ல உலகத்துல ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தா, அதை மத்தவங்களுக்குத் தெரிவிக்கவும் அது பற்றிக் கருத்துச் சொல்லவும்தான் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் எல்லாமே! ஸ்டெர்லைட்டை மூடுங்கன்னா, இதையெல்லாம் மூடச் சொல்லியிருக்கீங்க. இதே நிலைமை தொடர்ந்ததுன்னா, நீங்க சீக்கிரமே கடையை மூடவேண்டியதுதான்!

aarthi

கலைஞர் என் கல்யாணத்தை நடத்தி வெச்சார். ஜெயலலிதா கட்சியில நான் இருந்தேன். இவங்க ரெண்டுபேரும் பதவியில இருந்தப்போ எல்லாம் வடக்க இருக்கிறவங்க நம்மகிட்ட வாலாட்ட நினைச்சாங்களா? இப்போ அவங்க ஒருபுறம் நம்மை நசுக்கத் துடிக்கிறாங்க. நிலைமை இப்படி இருக்கிறப்போ, நம்ம மக்களை நாமே சுட்டுக் கொன்னா, என்னங்க அர்த்தம்?

நான் வழக்குக்கெல்லாம் பயப்படுறவ இல்லை. எதுக்குப் பயப்படணும்? எங்களை மாதிரி கலைஞர்களுக்கு ஆதரவு தர்றவங்க அந்தப் பாமர ஜனங்கதான். அவங்களுக்கு ஒரு பிரச்னைங்கிறபோது என்னால பேசாம இருக்க முடியாது. கேஸ்தானே, வந்து போடுங்க. என் வீட்டுல சிலிண்டர் காலியாயிடுச்சு!” என்றவரிடம்,

உங்கள் கணவர் பி.ஜே.பி கட்சியில் இருக்கிறார்தானே?’ என்றோம்.

“பி.ஜே.பி-யில் இருந்தா, அவர் என் வீட்டுல இருக்க முடியாது. பூரி தேய்க்கிற கட்டையைக் கொண்டே அடிச்சு மண்டையை உடைச்சிருப்பேனே!. என்னை மாதிரி அவரும் இப்போ எந்தக் கட்சியிலேயும் இல்லைங்க. பாரதிய ஜனதாவுல போய்ச் சேர்ந்தது உண்மைதான். ஆனா, அந்தக் கட்சியோட நடவடிக்கைகள் பிடிக்காததுனால ஒதுங்கிட்டார். `கட்சிக்கு முறைப்படி ஒரு கடிதம் எழுதிக்கொடுத்து ஒதுங்கிடுங்க’னு சொன்னேன்.

actress arthy_ganesh

அதுக்கு அவர் சொன்ன பதில், `ஆமா, அது ஒரு கட்சி. சேர்றப்போ என்ன நடந்தது முறைப்படி… ஒரேயொரு மிஸ்டுகால் கொடுத்தா, உறுப்பினர். அதுக்குப்போய் உட்கார்ந்து ஒரு லெட்டர் எழுதிப் பேப்பரையும் நேரத்தையும் வேஸ்ட் பண்ணனுமா?!’.

Advertisement