விஜய்க்காக தமிழில் டீவீட் செய்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்…!

0
920
Harbajansingh
- Advertisement -

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தீபாவளிக்குத் தமிழில் வாழ்த்துக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி `சர்க்கரைத் தமிழோடு இளைய தளபதி சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும்” என சர்கார் படத்துக்கும் தனது வாழ்த்துகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

-விளம்பரம்-

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சமீபகாலமாக தமிழில் ட்விட் செய்து அசத்தி வருகிறார். அவரது தமிழ் ட்விட்டுகளைக் கண்டு ரசிகர்கள் மிரண்டுபோயுள்ளனர். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு அவர் ஆடத்தொடங்கியதிலிருந்தே அவர் ட்விட்டுகளை தமிழில் பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

அவரது தமிழ் ட்விட்டுகள் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளைக்கொண்டுள்ளது. இந்த நிலையில், அவர் தீபாவளி வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சர்கார் படத்துக்கான அவரது வாழ்த்துகள் விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே. புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம். செந்தமிழ் தரணியெங்கும் #விவசாயம் செழிக்கட்டும், சர்க்கரை தமிழோடு இளைய தளபதி #சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும்#HappyDeepavali” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்விட்டு கமெண்டுகளில் விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement