‘லப்பர் பந்து’ படத்தைப் பார்த்துவிட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டு இருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் ‘லப்பர் பந்து’. இந்த படத்தை எஸ்.லட்சுமணன் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். படத்தில் அட்டகத்தி தினேஷ் கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார். இவர் கிரிக்கெட்டில் பேட்டிங் ஆடுவதில் சிறந்த வீரராக இருக்கிறார். இவர் அடிக்கும் ஒவ்வொரு பந்துமே சிக்ஸர் தான். இவர் விளையாடும் டீம் தான் கோப்பையை தட்டிச் செல்லும். ஆனால், இவர் கிரிக்கெட் விளையாடுவது அவருடைய மனைவிக்கு பிடிக்கவே பிடிக்காது.
லப்பர் பந்து:
இன்னொரு பக்கம் ஹரிஷ் கல்யாண் பந்துவீச்சில் பட்டய கிளப்புபவர். இவர் பந்து வீசினால் பேட்டிங் பண்ணும் போது அனைவருமே தடுமாறுவார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தினேஷுடைய ஆட்டத்தை தெரிந்த ஹரிஷ் கல்யாண் எப்படியாவது அவரை விக்கெட் எடுக்க வேண்டும் என்று வெறியுடன் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் என்று நடக்கும் போட்டா போட்டிகள், பொறாமைகள், சரிக்கு சரி என்று தன்னை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வேட்கை என கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.
ஹர்பஜன் சிங் பதிவு:
மேலும் சமூகத்தில் நடக்கும் ஆதிக்கத்தையும் எதார்த்தமாக கூறியிருக்கும் இப்படம் பலரது பாராட்டுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லப்பர் பந்து படத்தை பார்த்து பாராட்டி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னோட அடுத்த தமிழ் பட Direction டீம் சொன்னாங்க, “சார் லப்பர் பந்துனு ஒரு படம் வந்துருக்கு. கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட். சும்மா அட்டகாசமாக இருக்கு பாருங்கனு” . கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா என்று கூறி இருக்கிறார்.
என்னோட அடுத்த தமிழ் பட Direction டீம் சொன்னாங்க "சார் #lubberPandhu னு ஒரு படம் வந்துருக்கு., கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு". கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா @Prince_Pictures @iamharishkalyan 👌@tamizh018🌟 #GethuDinesh🧨
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 27, 2024
கிரிக்கெட் வீரர் அஸ்வின் பதிவு:
ஏற்கனவே இந்த படத்தை பாராட்டி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், திரைப்படம் எடுப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. பலரின் கடின உழைப்பு அதில் அடங்கியிருக்கிறது. அதனால், நான் எந்த படத்தைப் பார்த்தாலும் அதில் இருக்கும் குறைகளை சொல்வதில்லை. அதில் இருக்கும் நிறைகளை மட்டும் சொல்வேன். ஆனால் ஒரு உண்மை சொல்ல வேண்டுமென்றால், பல ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட்டுச் சார்ந்த ஒரு நல்ல படத்தை பார்த்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.
பாராட்டிய அஸ்வின்:
சமீப காலமாக விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் ஒரே மாதிரியாகவும், சிறிது மிகைப்படுத்தியும் எடுக்கிறார்கள். ஆனால், கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் தமிழ் திரைப்படங்கள் அதிலிருந்து விலகி, எதார்த்ததுடன் என்ன சொல்ல வேண்டுமோ, அதை மிகத் தெளிவாகச் சொல்லும் திரைப்படங்களாக இருக்கின்றன. ஒரு விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டுமோ என்பதற்கு உதாரணமாக இருக்கின்றன. அந்த வகையில் ‘லப்பர் பந்து’ தனித்துவத்துடன் மிக முக்கியமான திரைப்படமாக என்னைக் கவர்ந்திருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள் என்று பாராட்டி பதிவிட்டு இருந்தார்.