விவாகரத்துக்கு பின் பிரபல நடிகையை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா காதலிக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே பிரபலமான ஜோடிகள் விவாகரத்து செய்வது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. சமந்தா- நாகசைதன்யா, தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ்- சைந்தவி ஆகியோர் பிரிய இருப்பதாக அறிவித்திருந்தார்கள். இந்த வரிசையில் தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா இணைந்திருக்கிறார்.
இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா. இவர் நடாஷா என்பவரை கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் இவர்களுக்கு அகஸ்தியா என்ற அழகான குழந்தையும் பிறந்தது. அதோடு இவர்கள் முறையாக திருமணம் செய்து கொள்ளாததால் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உதய்பூரில் நெருங்கிய நண்பர்கள் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஹர்திக் பாண்டியா விவாகரத்து:
மேலும், நன்றாக சந்தோசமாக சென்று இருந்த அவர்களுடைய வாழ்க்கையில் விரிசலும் ஏற்பட்டது. டி20 உலகக் கோப்பை போட்டி துவங்குவதற்கு முன்பே நடாசா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஹர்திக் பாண்டியா உடைய புகைப்படங்களை நீக்கி இருந்தார். இதை பார்த்து பலரும், இவர்கள் இருவரும் பிரிய போகிறார்களா? என்னாச்சு? என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். இருந்தும் இருவருமே எந்த ஒரு பதிலையும் கூறவில்லை.
அனன்யா பாண்டே-ஹர்திக் காதல்:
சமீபத்தில் தான் இவர்கள் இருவருமே பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா, அனன்யா பாண்டே ஒன்றாக இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் நடந்த முடிந்த அம்பானி வீட்டு திருமணத்தில் ஹர்திக் பாண்டியா, அனன்யா இருவரும் சேர்ந்து நடனம் ஆடி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இருவரும் ஒருவரை ஒருவர் சோசியல் மீடியாவில் பாலோவ் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அனன்யா பாண்டே குறித்த தகவல்:
அனன்யா பாண்டே சங்கி பாண்டேவின் மகள் ஆவார். இவர் சினிமா உலகில் நுழைவதற்கு முன்பு மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்தார். அதற்குப் பிறகு தான் இவர் தெலுங்கு மொழியின் மூலம் நடிக்க தொடங்கினார். பெரும்பாலும் இவர் கிளாமராக தான் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
அனன்யா பாண்டே காதலர்கள்:
இதனிடையே இவர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டர், கார்த்திக் ஆர்யன் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோருடன் டேட்டிங் செய்திருந்தார். இது பலரும் அறிந்த ஒன்றுதான். சமீபத்தில் தான் ஆதித்யாவை இவர் பிரிந்து வந்தார். தற்போது இவர் ஹர்திக் பாண்டியாவை காதலிப்பதாக கூறியிருக்கிறார். தன்னுடைய மனைவியை பிரிவதாக அறிவித்த ஒரு வாரத்திலேயே ஹர்திக் பாண்டியா, அனன்யா பாண்டே உடன் காதலில் இருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.