‘நான் தான் அவர் மனைவி, இல்ல நான் தான்’ – சிறையில் இருக்கும் ஹரி நாடருக்காக சண்டை போடும் பெண்கள்.

0
632
harinadar
- Advertisement -

நடிகை விஜயலட்சுமியை மிரட்டிய வழக்கில் சிறையில் இருக்கும் ஹரி நாடாருக்காக இரண்டு பெண்கள் அடித்துக் கொள்ளும் சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடமாடும் நகை கடை என்று பலராலும் அறியப்பட்டவர் ஹரிநாடார். இவர் நெல்லை மாவட்டம் இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர். ஆனால், இவர் சென்னையில் செட்டில் ஆகி உள்ளார். இவர் பனங்காட்டு படை என்ற கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். கை, கழுத்துகளில் சிறிது நகையுடன் ஆரம்பத்தில் வலம் வந்த இவர் நாட்கள் செல்லச் செல்ல உடல் முழுவதும் நகை அணிந்து நகைகடையாகவே மாறினார். இதற்கு பலரும் விமர்சித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

பின் தன்னிடம் இருந்த பணத்தினால் இவர் தேர்தலில் களமிறங்கினார். அதற்கு பிறகு சினிமாவிலும் கால்தடம் பதிக்க நினைத்தார். இவர் நடிக்க இருந்த படம் சில காரணங்களால் தடைப்பட்டது. பின் ஹரி நாடார் கட்டப்பஞ்சாயத்து, பணமோசடி என பிரச்சனையில் சிக்கி வந்தார். அதனை தொடர்ந்து குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி கொடுப்பதாக 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு தொடர்பாக போலீஸ் அதிரடியாக ஹரி நாடாரை கைது செய்து பெங்களூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

- Advertisement -

ஹரி நாடார் மீது விஜயலக்ஷ்மி அளித்த புகார்:

இந்த நிலையிலும் நடிகை விஜயலட்சுமிக்கு வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்து பல உதவிகள் செய்து வந்திருக்கிறார் ஹரி நாடார். பின் சில மாதங்களாகவே சீமானுக்கு ஆதரவாக ஹரி நாடார் தன்னை மிரட்டுகிறார் என்று விஜயலட்சுமி திருவான்மையூர் காவல்நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்து இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதன் அடிப்படையில் போலீசார் ஹரிநாடாரை கைது செய்து தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்தனர்.

ஹரி நாடார் முதல் மனைவி அளித்த புகார்:

தற்போது அவர் சைதாப்பேட்டை சிறையில் இருக்கிறார். இதனால் பனங்காட்டுப் படை கட்சியிலிருந்து ஹரி நாடாரை கட்சியின் தலைவர் ராக்கெட்ராஜா நீக்கி இருப்பதாக அறிவித்திருந்தார். இப்படி சிறையில் இருந்து வெளியே வர முடியாத அளவிற்கு பணம் கஷ்டமும், பிரச்சனைகளும் தலைக்குமேல் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் நிலையில் ஹரி நாடாரின் முதல் மனைவி ஷாலினி நெல்லை போலீசாரிடம் புகார் அளித்துள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகாரில் ஷாலினி கூறியிருப்பது, நாங்கள் இருவரும் கேரளாவில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தோம்.

-விளம்பரம்-

ஹரி நாடார் செய்த திருமணங்கள்:

அப்போது தான் நான் அறிந்தவரை சந்தித்தேன். பின் நாங்கள் இருவரும் 2011ல் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், ஹரிநாடார் என்னை ஏமாற்றிவிட்டு மலேசியாவை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணோடு கேரளாவில் வாழ்ந்து வருகிறார். ஹரிநாடார் தான் என் கணவர். சட்டப்படி நாங்கள் இன்னும் விவாகரத்து கூட வாங்கவில்லை. நான் விவாகரத்து கொடுக்க மாட்டேன். அதோடு என்னை மஞ்சு போன் பண்ணி மிரட்டுகிறார். நீ மனைவி கிடையாது விலகி போ என்று மிரட்டுகிறார். அதுமட்டும் இல்லாமல் பெங்களூர் போலீசார் மஞ்சுவை தான் ஹரிநாடார் மனைவி என்று ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். நான் தான் ஹரி நாடார் மனைவி.

ஹரி நாடாருக்காக அடித்து கொள்ளும் பெண்கள்:

மஞ்சு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சைதாப்பேட்டை சிறையில் ஹரி நாடாரை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதனையடுத்து மஞ்சு, ஹரிநாடார் தான் என் கணவர். நாங்கள் சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி சிறையில் இருக்கும் குற்றவாளிக்காக இரண்டு பெண்கள் அடித்துக் கொள்ளும் சம்பவம் வேடிக்கையாகவும், வியப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

Advertisement