கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த வாரம் வியாழனன்று புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தகுத்தலில் 40 CRPF வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் ஆகிய இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் தமிழகமே சோகத்தில் மூழ்கியது.
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு பலரும் உதவிகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் ரோபோ சங்கர் உயிரிழந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் அளித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களது குடும்பதிற்க்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை கொடுத்து உதவி செய்துள்ளார்.