சினிமா துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயின்கள் நிலைத்து நிற்பது என்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில் நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு ,ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இன்றளவும் ஒரு முன்னணி ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார்.
தற்போது தமிழ்,தெலுங்கு ஹிந்தி போன்ற சினிமாவில் அரை டஜன் படங்களின் வாய்ப்புகளை வைத்திருக்கும் தமன்னா.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய தமன்னா கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த நடிகருடன் நான் நடிக்க மாட்டேன் என்று கூ றியிருக்கிறுப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பின்னர் பேட்டியளித்த தமன்னா இது போன்று கூறியுள்ளார்.
இதுவரை 40 படங்களுக்கும் மேல் நடித்த அந்த நடிகருடன் நான் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்து விட்டேன் எனவும், அவருடன் நடிக்கும் போது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல இன்னல்களை சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருடன் நடிக்க 1 கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் நடந்து விட்டது. தற்போது அவர் சர்ச்சை இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்த படத்தை பச்சை தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளது இதனிடையே அந்த படத்தில் நடிப்பதற்காக தமன்னாவை அணுகியபோது அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வேண்டவே வேண்டாம் என்று தட்டிக் கழித்துள்ளார் தமன்னா.அந்த நடிகர் யார்? எந்த படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்று உங்களால் முடிந்தால் கண்பிடியுங்கள்.