சமீப காலமாக கள்ள காதல் விவகாரத்தால் ஏற்படும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் சென்னையை சேர்ந்த அபிராமி என்பவர் கள்ளக்காதலருக்காக பெற்ற பிள்ளைகளையே கொன்ற கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

Advertisement

தற்போது அபிராமி சம்பவத்தை போன்றே கள்ளகாதலருக்காக கட்டிய கணவனையே மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரரை சேர்ந்த தம்பதிகள் முகமது சமீர் மற்றும் பிரதோஸ்.முகமது சமீர் அரபு நாட்டில் இன்ஜினியர் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே உள்ள கொடைக்கானல் மலைப்பாதையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கபட்டது. போலீஸ் விசாரணையில் அது முகமது சமீரின் உடல் என்று கண்டுபிடிக்கபட்டது. தொடர் விசாரணையில் முகமது சமீர் மனைவி பிரதோஸிற்கு யாசிக் என்பவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கள்ளக்காதல் விஷயம் பிரதோஸ் வீட்டாருக்கு தெரிய, அவர் கண்டித்துள்ளார்.ஆனால் காமம் கண்ணை மறைத்து விட்டது.

Advertisement

Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ள சமீர் தனது மனைவி பிரதோஸ் மற்றும் 6 மாத ஆண் குழந்தையுடன் பெங்களூருவுக்கு காரில் சுற்றுலா சென்றார். அந்த காரை, பிரதோஸின் கள்ளகாதலரான முகமது யாசிக் ஒட்டியுள்ளார்.முகமது சமீரை கொலை செய்ய பிரதோஸ் முகமது யாசிக்குடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். இதற்காக இளநீரில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கணவருக்கு கொடுத்துள்ளார்.

இதில் மயங்கிய அவரை இறந்துவிட்டதாக நினைத்து காரின் பின் சீட்டில் உட்கார்ந்த நிலையில் வைத்து விட்டு, கர்நாடகா மாநிலத்தில் பல இடங்களுக்கு சென்றனர். அங்கு காட்டு பகுதியில் உடலை வீசி விடலாம் என்று முடிவு செய்துள்ளனர். அது முடியாமல் போகவே கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசி விடலாம் என்று புறப்பட்டு வந்தனர். அப்போது ஓசூர் அருகே வந்த போது குழந்தை அழுத சத்தம் கேட்டு முகமது சமீர் முனங்கி உள்ளார். இதையடுத்து அவர் இறக்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தது. உடனே அங்கு கொலை செய்ய கத்தி ஒன்றை முகமது யாசிக் வாங்கியுள்ளார்.

இந்த கொலைக்கு பின்னர் பிரதோஸ் மற்றும் யாசிக் ஆகிய இருவரும் தலைமறிவாகியுள்ளனர். இதையடுத்து தேவதானப்பட்டி போலீஸ் நடித்திய தீவிர விசாரணையில் பிரதோஸ், கள்ளக்காதலுடன் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தேடுதல் வேட்டையை தொடங்கிய போலீசார் பெங்களூரு கப்பன்பார்க் பகுதியில், பதுங்கி இருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர் சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement