இளையராஜா ராயல்டி விவகாரத்தில் அதிரடி தீர்ப்பை வழங்கியது உயர் நீதி மன்றம்.!

0
896
Ilayaraja
- Advertisement -

இளையராஜா கடந்த சில காலமாகவே பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதிலும் இளையராஜா இசையமைத்த பாடல்களை அனுமதி பெறாமல் பலரும் பாடல்களை பாடியதால் தனது பாடல்களை படுபவர்களிடம் ராயல்டி கேட்டு இளையராஜா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.

-விளம்பரம்-
Related image

சென்னை உயர்நீதி மன்றத்தில் இளையராஜா தொடர்ந்த வழக்கில் ‘அகி, எக்கோ மியூசிக், கிரி டிரேடர்ஸ் உள்ளிட்ட இசை நிறுவனங்கள், தான் இசையமைத்துள்ள பாடல்களை அனுமதியின்றி  பயன்படுத்துவதாகவும், அந்த பாடல்களுக்கு தான் முழுமையான உரிமை பெற்றுள்ளதாகவும், அந்த பாடல்களை பயன்படுத்த அந்நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இதையும் படியுங்க : ரம்ஜானை முன்னிட்டு விஜய் 63 பாடல் அப்டேட்டை வெளியிட்ட இசைப்புயல்.! வைரலாகும் ட்வீட்.! 

- Advertisement -

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இளையராஜா பாடல்களை பயன்படுத்த  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நிரந்தரமாக்கி தற்போது உத்தரவிட்டுள்ளார்.இளையராஜா பாடல்களை திரையரங்குகளை தவிர வேறு எங்கும் பயன்படுத்த கூடாது என்றும், ஆன்லைன் உள்ளிட்ட ரேடியோ  நிறுவனங்கள், இசை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Image result for high court chennai

பயன்படுத்த வேண்டும்  என்றால் இளையராஜாவிடம் தகுந்த அனுமதி பெற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், அகி இசை நிறுவனம் இளையராஜா பாடல்களை 10 ஆண்டுக்கு பயன்படுத்த  உரிமை உள்ளதாக தொடர்ந்த வழக்கையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement