கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருவர் நடித்த வாரிசு மற்றும் துணிவு என இரண்டும் வரும் 11 ஆம் தேதி மோதிக்கொள்ள இருக்கின்றன. இதனால் படத்தின் அறிவிப்பு வெளியான நேரத்தில் இருந்தே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. பொதுவான சினிமா ரசிகர்கள் இரு படங்களும் வெற்றியடைய வேண்டும் என்று கூறிவந்தாலும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் வழக்கம் போல மோதல்கள் ஏற்பாடுதான் வருகிறது.

வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் முதலில் வெளியாகிய நிலையில் அவை பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு பாடலின் மீது ட்ரோல்களும் சோசியல் மீடியாவில் விமர்சனங்களும் வந்தபடியாக இருந்தன. பின்னர் அஜித் நடித்த துணிவு படத்தின் பாடல்களும் டிரைலரும் பெரியாகி இருந்தது. ஆனால் பாடல்களும் படத்தின் ட்ரைலரும் விஜய் முன்னதாக நடித்த பீஸ்ட் படத்தை போன்று இருக்கிறது என்று ரசிகர்கள் கேலி செய்து வந்தனர்.

Advertisement

தெலுங்கு வாரிசு :

வாரிசு திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகும் நிலையில் இதன் தெலுங்கு படமான வாரிசுடு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு மொழியில் வாரிசுடு திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பாலைய்யா நடித்த வீர சிம்ம ரெட்டி படம் வரும் 12ஆம் தேதியும், சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா படம் 13ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது

ப்ரோமோஷன் :

இந்த நிலையில் இரு படக்குழுவினரும் அவரவர் படங்களை ப்ரோமோஷன் செய்வதில் குறியாக உள்ளனர். குறிப்பாக வாரிசு இசை வெளியிட்டு விழா, துணிவு படத்திற்கு வானத்தில் இருந்து போஸ்டருடன் குதிப்பது என இருந்து வந்தனர். ரசிகர்களும் கடலுக்கடியில் போஸ்டர் வைப்பது, பழனிக்கு காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது, போஸ்டர் அடிப்பது என இருந்து வருகின்றனர். அந்த வகையில் ஐயப்ப பக்தர்கள் வாரிசு மற்றும் துணிவு பட போஸ்டர்களை சபரிமலைக்கு கொண்டு சென்று படம் வெற்றிபெற வேண்டி பிராத்தனை செய்து வருகின்றனர்.

Advertisement

தடை விதித்த உயர்நீதி மன்றம் :

இப்படி ஒரு நிலையில்தான் கேரள உயர்நீதிமன்றம், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்குள் சினிமா போஸ்டர்களையும், இசைக்கருவிகளையும் எடுத்து செல்வதற்கும் வாசிப்பதற்கும் தடை விதிக்குமாறு சபரிமலை தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வழிபாடு செய்ய உரிமை உள்ளது எனவும் ஆனால் அது கோவிலின் பாரம்பரிய நடைமுறைகளுக்கு எதிராக இருக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது உயர்நீதிமன்றம்.

Advertisement
Advertisement