மீண்டும் நடிகை சித்ரா வழக்கு மேல்முறையீடு , ஹேம்நாத்திற்கு உயர் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ்

0
201
- Advertisement -

நடிகை சித்ராவின் வழக்கை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவை யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள். சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் விஜே, தொகுப்பாளினி, நடிகை, மாடலிங் என பல திறமைகளைக் கொண்டு இருந்தார். அதோடு இவர் தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்.

-விளம்பரம்-

இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும், ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை அனைவரையும் பாதித்த ஒன்று. சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சித்ரா சீரியல் ஷூட்டிங்க்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார்.

- Advertisement -

சித்ரா தற்கொலை :

அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார். இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று அவர் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்தார்கள். அதன் பெயரில் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதோடு சித்ரா இறந்து நான்கு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், இவருடைய மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? அதற்கு காரணமானவர்கள் யார்? சித்ராவிற்கு நீதி கிடைத்ததா? என்று விடை தெரியாமல் இருந்தது.

சித்ரா மரணம் குறித்த சர்ச்சை:

இப்படி ஒரு சூழ்நிலையில் சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிகள், பிரபலங்கள் தான் காரணம். என் உயிர்க்கும் ஆபத்து இருக்குது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று ஹேமநாத் கடந்த ஆண்டு பேட்டி ஒன்று அளித்து இருந்தார். இப்படி இவர் கூறியதை அடுத்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இன்னொரு பக்கம் சித்ராவின் இறப்பு குறித்து மரண வழக்கு நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், தீர்ப்பு கிடைத்தப்பாடு இல்லை. இதனால் சித்ராவின் பெற்றோர்கள் திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்கள்.

-விளம்பரம்-

நீதிபதி உத்தரவு:

இதை அடுத்து சமீபத்தில் இந்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சித்ராவின் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம் என்று அவருக்கு எதிராக எந்த ஒரு ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் இந்த மரண வழக்கில் இருந்து சித்ரா கணவர் ஹேம்நாத்தை விடுவிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை கேட்டு சித்ராவின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

சித்ரா வழக்கு நீதிபதி உத்தரவு:

இந்த நிலையில் சித்ராவின் வழக்கை அவருடைய பெற்றோர்கள் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். அதில் அவர்கள், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை சரியாக முறையாக கவனித்து விசாரிக்காமல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பை அளித்திருக்கிறது. அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். பின் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஹேம்நாத் சரியான பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதோடு இந்த வழக்கை நவம்பர் 5ஆம் தேதிக்கும் தள்ளி வைத்திருக்கிறது.

Advertisement