மெர்சல் படம் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் !-நீதிபதியின் சரமாரி கேள்விகள் !

0
1633
mersal
- Advertisement -

தீபாவளிக்கு வெளியாக பா.ஜ.கவினால் பிரச்சனை உண்டாக்கப்பட்டு பின்னர் படத்தின் காட்சிகள் நீக்கப்படமாட்டாது என படக்குழுவினால் அறிவிக்கப்பட்டு பிரச்சனை ஓய்ந்தது.
mersalஇன்னிலையில் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. படத்தில் வரும் ஜி.எஸ்.டி பற்றிய காட்சிகள் தவறாக உள்ளது, படத்திற்கு அவசர அவசரமாக சென்சார் சான்றிதல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த காட்சிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளனர் எனவே படத்தையே தடை செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த ‘அஸ்வத்தாமன்” வழக்கு தொடர்ந்திருந்தார்.

-விளம்பரம்-

இதையும் படிங்க: விஜய் அரசியலில் நுழைவது உறுதியாகிவிட்டது – அதற்கான புகைப்படம் உள்ளே !

- Advertisement -

மேலும், படத்திற்கு கொடுப்பட்ட தணிக்கை சான்றிதலை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரியிருக்கிறார்.இன்று காலை அந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
High court
படத்தை விசாரித்த நீதிபதிகள் வழக்கு தொடர்ந்தவருக்கு சரமாரியாக கேள்வி மேல் கேள்விகளாக கேட்டு சாட்டையடி கொடுத்தனர்.’மெர்சலை படமாக பார்க்க வேண்டும், அதில் உள்ள காட்சிகளை ஆராய்வது உங்களின் வேலை அல்ல, அதற்குத் தான் தணிக்கை குழு உள்ளது.

உண்மையிலேயே பொதுநல வழக்காக இருந்தால் படத்தில் மாற்றுத்திறனாளிகளை தவறாக சித்தரித்தது பற்றி வழக்கு தொடர்ந்திருக்கலாமே?”என்று கேள்விக்கனைகளால் அவரைத் தாக்கி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

-விளம்பரம்-
Advertisement