தமிழ் நடிகர்களில் ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே பாலிவுட் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிலும் ஹாலிவுட் வாய்ப்பு என்பது மிக அரிது பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் தான் ஹாலிவுட்டில் கால்தடம் பதித்து வந்தனர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி, நொபொலீயன் என்று ஒரு சிலர் மட்டுமே கால்பதித்து இருந்தனர். ஆனால், இளைய தலைமுறை நடிகர் நடிகைகளில் யாரும் யாரும் ஹாலிவுட் படத்தில் நடித்தது இல்லை. அந்த குறையை தீர்த்து வைத்தவர் நடிகர் தனுஷ் தான். தமிழ் சினிமாவின் ஸ்லிம் சிவாஜி, தென்னெக ப்ருஸ்லீ, நடிப்பு அசுரன் என்று பல்வேறு பட்டப் பெயர்களால் அழைக்கப்படுவர் தனுஷ்.

தமிழில் பல படங்களில் தனது அசுரத்தனமான நடிப்பை நிரூபித்த தனுஷ், ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். அதே போல ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், அதை தொடர்ந்து சமிதாப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடித்து இருந்தார். இப்படி கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற தனுஷ், The Extraordinary Journey of the Fakir என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால்பதித்தார்.

Advertisement

பாலிவுட்டில் ஆளும் தமிழன் :

இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் இந்தியில் பல படங்களில் நடித்துவிட்டார். நடிகர் தனுஷ் கடந்த 2013ல் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் சிற்பபான விமர்சனங்களை பெற்றிருந்தார். தொடர்ந்து அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசனுடன் இணைந்து பால்கி இயக்கத்தில் ஷமிதாப் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

ஹிந்தி பட ப்ரோமோஷன் :

இந்த இரு படங்களும் தனுஷிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இதையடுத்து தற்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அட்ராங்கி ரே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் தனுஷ். அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் ஒன்றில் பங்கேற்றார்.

Advertisement

சவுத்ல பேசுங்க தனுஷ் :

அப்போது தனுஷ்ஷை பத்திரிகையாளர்கள் சிலர் வளைத்து வளைத்து புகைப்படங்களை எடுத்தனர். அப்போது அங்கு இருந்த பத்திரிகையாளர் ஒருவர் ‘சௌத்தில் எதாவது பேசுங்கள்’ என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். அப்போது தனுஷ் ‘வணக்கம், வணக்கம்’ என்று சொல்லிவிட்டு கிளம்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

அப்போ மதராஸி இப்போ சவுத் :

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவ தமிழ் ரசிகர்கள் பலரும் கடுப்பாகி இருக்கின்றனர். சவுத் என்பது தான் தமிழர்களின் மொழி என்று வட இந்தியர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்களா? இதற்கு முன் மதராசின்னு நம்பள கூப்பிட்டானுங்க, அது தான் நம்மளோட மொழின்னு நெனச்சிட்டு இருந்தானுங்க. இவனுங்க மாறவே இல்லை என்று கூறி வருகின்றனர்.

Advertisement