முதலில் 1500 டி-ஷர்ட் தான் அடித்தேன், இப்போ 15,000 டி-ஷர்ட் ஆர்டர் வந்திருக்கு – வைரல் டி-ஷர்ட்டை அச்சிட நபர் பேட்டி.

0
1746
hindi
- Advertisement -

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மும்மொழி கல்வி விவகாரம் பெரும் பஞ்சாயத்தில் இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்த மும்மொழி கொள்கை விவகாரம் சமூக வலைத்தளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.

-விளம்பரம்-

பல மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்ற நிலையில், இந்த கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சமீபத்தில் கூட தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்தி தெரியாது போடா என்ற டி-ஷர்ட்டை பிரபலங்கள் பலரும் அணிந்து இந்தி திணிப்பிற்கு எதிராக தங்களது ஆதரவை தெரிவித்தனர். யுவன் ஷங்கர் ராஜா, வெற்றிமாறன், சாந்தனு என்று பல பிரபலங்களும் இந்த டி-ஷர்ட்டை அணிந்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதவிட்டனர். இப்படி ஒரு நிலையில் இந்த வைரல் டி-ஷர்ட்டை அச்சிட்ட நபரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

இந்தி தெரியாது போடா டி-ஷிர்ட்டை அச்சிட்டது திருப்பூரை சேர்ந்த இவர் தானாம். இந்த டி-ஷர்ட்டை வடிவமைத்தது திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தான். திருப்பூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக பின்னலாடை நிறுவனத்தை நடத்தி வரும் இவர் திமுக மாணவர் அணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். முதலில் இந்த டீ சர்ட்டை திமுக எம்பி கனிமொழி தான் ஆர்டர் கொடுத்தாராம். ஆரம்பத்தில் 1500 டி-ஷர்ட்டுககளை அச்சிட்டாராம். பின்னர் இந்த டி-ஷர்ட் ஆனதால் தற்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமான டி-ஷர்ட்கள் ஆர்டர் வந்துள்ளதாக கார்த்திகேயன் கூறியிருக்கிறார். இந்தியா மட்டுமல்லாமல் கத்தார் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகிறது என்று கூறியிருக்கிறார் கார்த்திகேயன்

-விளம்பரம்-
Advertisement