ஹிப்ஹாப் ஆதி யூ டியூப் சேனலை ஹேக் செய்த மர்ம நபர்கள் – பங்கமாக கலாய்க்கும் நெட்சன்கள்.

0
637
hiphop
- Advertisement -

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதியின் யூ டியூப் சேனல் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்கள் பலர் உள்ளார். ஜி வி பிரகாஷ், விஜய் ஆன்டனி போன்றவர்கள் வரிசையில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக திகழ்ந்து வருவார் ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் ஆதி. இவர் முதலில் சினிமா துறைக்குள் படங்களில் இசை அமைக்கத் தொடங்கினார்.

-விளம்பரம்-

இதற்கு முன் கூட ஹிப் ஹாப் ஆதி நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு உள்ளார்.அதன் மூலமாக தான் இவருக்கு சினிமா உலகில் பாட வாய்ப்பு கிடைத்தது. இவர் இயக்குனர் சுந்தர். சியின் ஆம்பள படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பின் இவர் பல படங்களில் ஹிப் ஹாப் ஆதி பாடி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான நான் சிரித்தாள் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை இருப்பினும் இவர், சிவகுமாரின் சபதம், அன்பறிவு போன்ற படங்களில் நடித்து வருகிறார். ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ ஆகிய படங்களில் நாயகனாக மட்டுமே நடித்திருந்த ஆதி தற்போது ‘சிவகுமாரின் சபதம்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் ஆகி இருக்கிறார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே ஹிப்ஹாப்  தமிழா (Hiphop Tamizha) என்ற பெயரில் யூ டியூப் சேனலை ஆதி நிர்வகித்து வந்தார். இந்த யூடுயூப் பக்கத்தில் தான் இவரது பாடல்கள், வீடியோக்கள் போன்றவற்றை இந்த யூ டியூப் பக்கத்தில் அவர் பதிவேற்றி வந்தார். இந்த பக்கத்தை 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பின்தொண்டர்ந்து இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : இப்படி செஞ்சா இதான் தண்டனை – பிற்போக்குத்தனமான விஜய் டிவி சீரியல் ப்ரோமோவிற்கு ஐ.பி.எஸ் அதிகாரி பதில்

-விளம்பரம்-

இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதியின் யூ டியூப் பக்கத்தை மர்ம நபர்கள் சிலர் ஹேக் செய்துள்ளனர்.  அந்த யூ டியூப்  சேனலில் இருந்த வீடியோக்களும் அழிக்கப்பட்டுள்ளது. அதிலும் இவர் மிகவும் பிரபலமடைந்த ‘ஜல்லிக்கட்டு’ பாடலும் போய் விட்டது. இப்படி ஒரு நிலையில் ரசிகர்கள் பலரும் ஹிப் ஹாப் தமிழா யூடுயூப் பக்கத்தை ஹேக் செய்யப்பட்டத்தை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இவரது ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி பெரும் ட்ரோல்களுக்கு உள்ளாகி இருந்தது. இந்த பாடல் வெளியான போது பலரும் இவரை கேலி செய்து இருந்தனர். தற்போது இவரது யூடுயூப் பக்கமே ஹேக் செய்யப்பட்டு இருப்பதை கண்டு ரசிகர்கள் Sivakumar in Sabatham பாட்ட பார்த்து காண்டானவன் தான் கண்டிப்பா பண்ணிருப்பான் என்று கமன்ட் செய்து இருக்கின்றனர்.

Advertisement