இறுதி வரை ஆசை நிறைவேறாமல் இறந்து போனானார் வாசு

0
2165
vasu

ஆயிரத்திற்கும் மேற்பட்ட  தமிழ் படங்களில் நடித்தவர் வாசு. மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த அமைதிப் படை படத்தில் சத்யராஜுக்கு அல்வா வாங்கிக் கொடுத்த காட்சியில் நடித்த பிறகு இவர் அல்வா வாசுவாகிவிட்டார்.

வடிவேலு நகைச்சுவை குழுவில் முக்கிய நபராக இருந்தவர் அல்வா வாசு, வடிவேலுவின் பல அசத்தலான நகைச்சுவைகளுக்கு வித்திட்டவர் அல்வா வாசு. அவர் வடிவேலுடன் இணைந்து அடித்த பல “counter”கள் இன்றும் meme creators அதை templatesகளாக பயன் படுத்துகிறார்கள்.

“நீங்க வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்”, “கடல்லே இல்லயாம்” போன்ற counterகள் இவரது அடையாளங்கள். ஆடுகளம் படத்தில் இவர் செய்த வர்ணனை அனைவரையும் ரசிக்க வைத்தது.

மதுரையை சேர்ந்த இவர் ஒரு keyboard உடன் தான் சென்னை வந்தார். ஆம் இசை அமைப்பாளராக ஆக வேண்டும் என்பதே இவரது ஆசை. வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மணிவண்ணனிடம் உதவி இயக்கனுணராக பணிபுரிந்தார். அவருக்கு நகைச்சுவை மிக சாதாரணமாக வருவதால் மணிவண்ணன் அறிவுரைப்படி அவர் நகைச்சுவை நடிகரானார்.

Actor alwa Vaasuமணிவண்ணனுக்கு மிகவும் பிடித்தவர் அல்வா வாசு. அவர் ஒரு இயக்குனகாரக வர வேண்டும் என்பது மணிவண்ணனது விருப்பம். பல கதைகளை கைவசம் வைத்துக்கொண்டு எப்படியாவது ஒரு இயக்குனராக ஆக வேண்டும் என்ற ஆசையோடு வாசு முயற்சி செய்துள்ளார், ஆனால் இறுதிவரை அவரது ஆசை நிறைவேறவில்லை.

அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.