இளையராஜாவுக்கு சவால் விடும் வகையில் வைரமுத்து எழுதிய பாடல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே இளையராஜா- வைரமுத்து இடையே சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. சினிமாவில் ஆரம்பத்தில் இளையராஜா- வைரமுத்து கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றது. இவர்கள் இருவரும் முதன்முதலாக 1980-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த ‘காளி’ என்ற படத்தில் தான் கூட்டணி வைத்தார்கள்.
அதற்குப் பிறகு இவர்கள் கூட்டணியில் வந்த பாடல்களும் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. கடைசியாக 1986 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளிவந்திருந்த புன்னகை மன்னன் படத்தில் இருவரும் இணைந்து இருந்தார்கள். இந்த படத்தில் வெளிவந்த பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்குப் பிறகுதான் இவர்கள் இருவருமே பிரிந்து விட்டார்கள். அப்போது இளையராஜா தான் இசைக்கும் பாடல்கள் எல்லாம் ராஜா என்று தொடங்கும் வகையில் உருவாக்கி இருந்தார்.
இளையராஜா-வைரமுத்து சண்டை:
இதை அவர் வைரமுத்துக்கு எதிராக செய்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டு இருந்தது. அதற்கேற்ப தேவா முதன் முதலாக ரஜினிக்கு இசையமைத்த அண்ணாமலை படத்தில் வைரமுத்து ஒரு பாடலை எழுதியிருந்தார். அது வெற்றி நிச்சயம் வேத சத்தியம் என்ற பாடல். அதில் , ‘அடே நண்பா உன்னை வெல்வேன், சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்’ என்ற வரிகள் வரும். இதை அவர் இளையராஜாவை தாக்கி தான் எழுதியிருந்தார் என்று கூறப்பட்டது.
வைரமுத்து சவால் விட்ட பாடல்:
மேலும், இந்த பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் வருகிறது. இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு இளையராஜாவிற்கு வைரமுத்து சவால்விட்டு எழுதிய பாடல் . சில ஆண்டுகள் இவர்களுடைய சண்டை அமைதியாக இருந்தாலும் தற்போது பூகம்பமாக வெடித்து வருகிறது. கடந்த மாதம் இசை பெரிதா? வரி பெரிதா? என்ற கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் பாடல் தான் பெரியது என்று வைரமுத்து கூறியிருந்தது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
வைரமுத்து குறித்த தகவல்:
இது குறித்து பலருமே விவாதம் எழுப்பினார்கள். அதற்கு பிறகு மீண்டும் இவர்கள் சண்டை குறித்து அதிமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. ‘நிழல்கள்’ எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார்.
வைரமுத்து திரைப்பயணம்:
மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றம் சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். அதன் பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இதற்கு பலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து இருந்தார்கள்.