தாஜ்மஹாலின் முன்பு இந்தியர்கள் கூட செய்யாத செயலை செய்த ஹாலிவுட் நடிகர் ஸ்மித்..!

0
325
Steve-smith

இந்திய ரசிகர்ளுக்கு இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் திரைப்படங்களை காண முக்கிய காரணமாக இருந்தது ஜாக்கி சான், ப்ருஸ் லீ போன்ற நடிகர்களால் தான்.இவர்களை தண்டி இந்திய ரசிகர்களுக்கு பரிட்சியமான ஹாலிவுட் நடிகர்கள் பலர் இருந்தாலும் அதில் வில் ஸ்மித்தும் ஒருவர்.ஹோலிவுட்டில் வெளியான “மென் இன் பிளாக்” சீரிஸ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்.

Steve

ஹோலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவரான வில் ஸ்மித் ஹோலிவுட்டில் வெளியான “பேட் பாய்ஸ், ஹான்காக், ஐ-ரோபோட்” போன்ற பல படங்களின் மூலம் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களால் அறியப்பட்டவர். சமீபத்தில் நடிகர் வில் ஸ்மித் இந்தியாவிற்கு உல்லாச சுற்றுல்லா வந்துள்ளார், அப்போது இந்தியாவில் உள்ள பல சுற்றுல்லா தளத்திற்கும் சென்றிருக்கிறார்.

அதே போல ஆக்ராவில் உள்ள உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ் மஹாலை காண சென்றுள்ளார் ஸ்மித். பொதுவாக தாஜ் மஹாலை கண்டாலே பலரும் வித விதமான புகைப்படங்களை எடுத்துக்கொள்வது வழக்கம்.ஆனால், நடிகர் ஸ்மித் சற்று வித்யாசமாக தாஜ் மஹாலின் முன்பு அமர்ந்து தியானம் செய்வது போல புகைப்படத்தை எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்தியர்களின் காதல் சின்னமாக கருதப்படும் தாஜ் மஹால் முன்பு நடிகர் வில் ஸ்மித் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்தியாவில் உள்ள கங்கையில் புனித நீராடிய ஸ்மித, ரிக்ஸாவிலும் சென்று ஒரு சில பகுதிகளை சுற்றிப்பார்த்துள்ளார்.