கால்பந்து பயிற்சியாளர்.!பிகில் படத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலம்.! செம மாஸ்.!

0
1383
Bigil
- Advertisement -

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாராவா விஜய்யின் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதையும் பாருங்க : சாண்டி அழுததை கண்டு கண்ணீர் விட்ட முன்னால் மனைவி காஜல்.! 

- Advertisement -

இப்படி படத்தை பற்றிய பல பிளஸ் நீண்டு கொண்டே போக தற்போது இந்த படத்தில் வெளிநாட்டு கலைஞரகளும் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் Aimee Mc daniel என்ற பெண் கலைஞர் இணைந்துள்ளார். விளையாட்டு படங்களின் ஒளிப்பதிவாளரான இவர் Million Dollar Arm, Birth of legend, 13 Reason போன்ற ஆங்கில படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதே போல அதே துறை சார்ந்த Justin Skinner என்பவரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for Aimee Mcdaniel

ஏற்கனவே இந்த படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், ஷாருக் கான் போன்ற மாபெரும் நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாக வெளியான செய்தி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து. இந்த நிலையில் வெளிநாட்டு கலைஞர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படம் வேற லெவலில் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-
Advertisement