தெலுங்கு சினிமாவில் பல ஆண்டு காலமாக மிகப் பிரபலமான நடிகராக கொடிகட்டி பறப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் ஆரசியல்வாதியும் ஆவார். ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என் டி ராமாராவ் அவர்களின் ஆறாவது மகன் தான் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து இருக்கிறார். வயதானாலும் பாலகிருஷ்ணா அவர்கள் இன்னும் படங்களில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் அதிரடி, ஆக்ஷன் போன்ற படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா.
வீர சிம்ஹா ரெட்டி படம் :
இந்த நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் இன்று தெலுங்கு சினிமாவில் வெளியானது. இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வரலட்சிமி சரத்குமார், ஹனி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வாரிசு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார்.
Honey Rose is Balakrishna's mother in 'Veera Simha Redyy' 😂 https://t.co/DIq7PqDS8i
— Truly a Fake Account (🩸B +ve ) (@IHaveShedMyName) January 14, 2023
ஸ்ருதி ஹாசன் ஜோடி :
இதே நாளில் சிரஞ்சீவி நடித்திருந்த “வால்டர் வீரய்யா” திரைப்படமும் ஒன்றாக வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் எந்த படம் வெற்றியடைய போக்கியது என்ற எதிர்பார்ப்பு நிலவியது. வீர வீர சிம்ஹா ரெட்டி திரைப்பாடல் பழைய படங்களை போல எதிரிகளை எறும்புகளை போல தூக்கி வீசி ரசிகர்களை கவர்த்திருந்தார். அதே போல இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து இருக்கிறார்.
The Irony of Tollywood
— I_Am_Nt_U (@diljobhikahey) January 13, 2023
Honey Rose aged 31 (actual) plays with mother of Balakrishna who is aged 62 (actual), in the film in which his age is 30…..#JaiBalayya
அம்மாவாக நடித்துள்ள நடிகை :
62 வயது பாலகிருஷ்ணாவிற்கு 36 வயது ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்தது கூட ஆச்சரியமில்லை. இந்த படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக 31 வயது உடைய நடிகை நடித்து இருப்பது தான் ஆச்சரியம். . பொதுவாகவே தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளில் பாதிப் பேருக்கு மேல் மலையாளத்தில் இருந்து வந்தவர்கள் தான். நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூட மலையாத்தில் இருந்து வந்தவர். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஹனிரோஸ்.
After realising that honey rose was balakrishna's motherpic.twitter.com/MRvJbH8OR3
— вαвα уαgαツ (@SATHVI08) January 12, 2023
கேலி செய்யும் ரசிகர்கள் :
இவர் தமிழில் விக்ராந்த் ஜோடியாக முதல் கனவே, ஜீவா நடித்த சிங்கம் புலி, சலங்கை துரை இயக்கிய கதிரவன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. பின் நடிகை ஹனிரோஸ் அவர்கள் மலையாள படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் 62 வயது பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக நடித்துள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.