ஹனி ரோஸ் நடித்து வரும் ரேச்சல் படத்திற்கு எதிராக பசு பாதுகாப்பு அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் தகவல் தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. பொதுவாகவே தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளில் பாதிப் பேருக்கு மேல் மலையாளத்தில் இருந்து வந்தவர்கள் தான். நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூட மலையாத்தில் இருந்து வந்தவர். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஹனிரோஸ்.

இவர் தமிழில் விக்ராந்த் ஜோடியாக முதல் கனவே என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் ஜீவா நடித்த சிங்கம் புலி, சலங்கை துரை இயக்கிய கந்தர்வன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. பின் நடிகை ஹனிரோஸ் அவர்கள் மலையாள படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார். மேலும், இவர் தமிழ் படங்களில் நடிக்கும் போது பல துன்பங்களை அனுபவித்து இருந்ததால் தான் தமிழில் நடிக்கவில்லை என்று ஒரு முறை பேட்டியில் ஹனி ரோஸ் கூறி இருந்தார்.

Advertisement

மேலும், இவர் சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த வீர சிம்ஹா ரெட்டி படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கோபிசந்த் இயக்கி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக பாலகிருஷ்ணா நடித்து இருந்தார். இப்படத்தில் நடிகை சுருதி ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வரலட்சிமி சரத்குமார், ஹனி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு வாரிசு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார். அதோடு இந்த படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக நடிகை ஹனி ரோஸ் நடித்து இருப்பது தான் ஆச்சரியம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரேச்சல்.

Advertisement

இந்த படத்தை ஆனந்தினி பாலா இயக்கியிருக்கிறார். இந்த படம் மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் போன்ற பலமொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஹனி ரோஸ் மாட்டிறைச்சி வெட்டுபவராக நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் அனிரோஸ் அவர்கள் மாட்டிறைச்சி வெட்டுவது மாதிரி இருக்கிறது. தற்போது இது குறித்துதான் சோசியல் மீடியாவில் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.

Advertisement

ஏற்கனவே மாட்டிறைச்சி உண்பதற்கு எதிராக பல அமைப்புகள் போராடி வருகின்றது. பசு பாதுகாப்பு இயக்கங்களும் செயல்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் மாட்டிறைச்சி வெட்டுவது மாதிரியான போஸ்டரை குறித்து பசுவதைக்கு எதிராக இருக்கும் அமைப்புகள் விமர்சித்து சோசியல் மீடியாவில் பதிவு போட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த மாதிரி காட்சிகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதற்கு படத்தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பார்க்கலாம்.

Advertisement