தமிழகத்தில் பல கிளைகளை கொண்ட ஹோட்டல் சரவண பவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ள சமத்துவம் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்த கொலை வழக்கில் சிக்கிய அவருக்கு இந்த தண்டனை வழங்கபட்டுள்ளது.

சரவணபவன் உணவக மேலாளரின் மகள் ஜீவஜோதி. அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். சாந்தகுமார் சரவணபவன் உணவகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். 2001 ஆம் ஆண்டு ஜீவஜோதியை மறுமணம் செய்து கொள்ள சரவணபவனின் உரிமையாளர் ராஜகோபால் விரும்பியதாக கூறப்படுகிறது.

Advertisement

இதற்கு இடையூறாக இருந்ததால் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை ராஜகோபால் தனது ஆட்களுடன் கடத்திச் சென்று கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரின் உடல் கொடைக்கானலில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சரவணபவன் அதிபர் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பூந்தமல்லி நீதிமன்றம் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தீர்ப்பில், ஜீவஜோதி என்பவரின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சரவணபவன் உரிமையாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய  ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்வதாக தெரிவித்துள்ளது

Advertisement
Advertisement