ஓவியாவை ஆரவ் செல்லமாக இப்படி தான் அழைப்பாரோ..!

0
973
oviya-aarav
- Advertisement -

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கும் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. சொல்லப்போனால் ஆராவ், ஓவியாவை வைத்து தான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் என்றும் கூறலாம்.

-விளம்பரம்-

- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் மற்றும் ஓவியா ஜோடி தான் பிக் பாஸ் வீட்டின் லைம் லைட்டாக இருந்து வந்தனர்.ஆரவ்விடம் காதல் வலையில் விழுந்த ஓவியா, ஆரவ் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்ததும் மிகவும் நொந்து போனார்.

தற்போது நடிகர் ஆரவ் பீமராஜா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் ஆரவ் மற்றும் ஓவியாவின் காதல் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. இருவரும் சேர்ந்து ஊர் சுற்றிய வீடியோ ஒன்றும் சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் உலா வந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் ஓவியா மற்றும் ஆரவ் கடற்கரையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஹெலு (Helu) என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட இன்ஸ்டாகிராம் வாசிகள் அனைவரும் ஓவியாவின் பெயரான ஓவியா ஹெலனை செல்லமாக ஹெலு என்று கூறுகிறீர்களா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement