திட்டமிட்டதை விட ஒரு 5 நாள் முன்னர் மாஸ்டர் படத்தை வெளியிட ‘அமேசான்’ கொடுத்தது எத்தனை கோடி தெரியுமா ?

0
38454
master
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-200-1024x942.jpg

தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது. இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாக இருப்பதாக அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.ஏற்கனவே கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் இந்த திரைப்படத்தை இன்னும் சில நாள் ஓட்ட திட்டமிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : அட, இவங்க மூனு பேர் பிறந்த நாளில் கூட இப்படி ஒரு ஒற்றுமையா – அனிதா பகிர்ந்த சுவாரசிய கணக்கு.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை OTT வெளியிட்டுள்ள முடிவு திரையரங்க உரிமையாளர்களை கொஞ்சம் அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது.ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் திரையரங்குகளில் வெளியான வெறும் 16 நாட்களில் வெளியாவது இதுவே முதல்முறை. ‘மாஸ்டர்’ தியேட்டரில் ரிலீஸாகி 45 நாள்களுக்குப்பிறகுதான் ஓடிடியில் வெளிவரும் என முன்னர் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படம் அமேசான் நிறுமவனம் எவ்வளவு கோடி கொடுத்து வாங்கியது என்று வலைப்பேச்சு யூடுயூப் தளம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிஸ்மி தெரிவிக்கையில், மாஸ்டர் திரைப்படம் முதல் இரண்டு வாரத்தில் 110 கோடிகளை வசூல் செய்து தயாரிப்பாளருக்கு 60 கோடி பங்கு கிடைத்தது. ஆனால், மூன்றாவது வாரத்தில் அதிக பட்சம் 4 கோடி மட்டும்தான் தயாரிப்பாளருக்குளுக்கு பங்கு கிடைத்திருக்கிறதாம்.ஆரம்பத்தில் படக்குழு மற்றும் அமேசான் நிறுவனம் இருவர்களும் திரையரங்கில் வெளியான 21 நாள் கழித்து படத்தை வெளியிட ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் படத்தை 29ஆம் தேதி(அதாவது ஒரு 5 நாள் முன்னர்) வெளியிட அமேசான் நிறுவனம் தயாரிப்பாளர் லலித்திடம் கேட்டபோது அவர் 20 ரூபாய் கேட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இறுதியில் 16 கோடிக்கு இருவரும் ஒப்புக் கொண்டுள்ளதாக பிஸ்மி தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தின் OTT உரிமையை அமேசான் நிறுவனம் 15 கோடிக்கு வாங்கி இருந்ததாக பிரபல பத்திரிக்கை வீடியோ வெளியிட்டு இருந்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட அமேசான் நிறுவனம் 36 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

Advertisement