அட, இவங்க மூனு பேர் பிறந்த நாளில் கூட இப்படி ஒரு ஒற்றுமையா – அனிதா பகிர்ந்த சுவாரசிய கணக்கு.

0
19551
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 9.jpg

இறுதி போட்டியில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் மட்டும் இருந்த நிலையில் ரம்யா மற்றும் சோம் வெளியேற்றப்பட்டனர். முதல் இடத்தை மட்டும் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஆரி. பிக் பாஸ் 4 சீசனில் இறுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார் ஆரி.

இதையும் பாருங்க : 21 ஆண்டுகளுக்கு பின் கே எஸ் ரவிக்குமார் செய்யும் முயற்சி – லாஸ்லியாவுடன் ஜோடி சேர்ந்த பிக் பாஸ் 3 பிரபலம்.

- Advertisement -

ஆரி, பட்டத்தை வென்ற போது அனிதா மற்றும் சனம் ஷெட்டி இருவரை தவிர யாரும் பெரிதாக உற்சாகமடையவில்லை. அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை ஆரி, சனம் மற்றும் அனிதா மூவரும் ஒரு குழுவாக தான் இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சம்பத் தனது ரசிகர்கள் அனுப்பி இருந்த சில மெசேஜ்களுக்கு பதில் அளித்து இருந்தார். அந்த வகையில் ரசிகர் ஆரி உங்களிடம் உண்மையாக தான் இருந்தார். பிக் பாஸ் உள்ளே நடந்ததை அணைத்தையும் மறந்து நீங்கள், சனம், ஆரி ஆகிய மூவரும் நல்ல நண்பர்களாக இருங்கள் என்று மெசேஜ் அனுப்பி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த அனிதா சம்பத், ஆமாம், ஆரி மற்றும் சனம் எப்போதும் என்னுடைய நல்ல நண்பர்களாக இருப்பார்கள் என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் அனிதா, ஆரி, சனம் ஆகிய மூவரின் பிறந்தாநாளில் இருக்கும் ஒற்றுமை குறித்து அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதாவது இவர்கள் மூவரும் 12 ஆம் தேதியில் பிறந்தவர்களாம். அதே போல இவர்கள் மூவரின் பிறந்த தினம், மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டினால், 29,30,31 என்று தொடர்ச்சியான எண்கள் தான் வருகிறது.

-விளம்பரம்-
Advertisement