பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்வது ,1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி? இதோ செம திட்டம்.

0
511
- Advertisement -

பிபிஎஃப் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிப்பது குறித்த விரிவான விவரங்களை பற்றி இங்கு பார்க்கலாம். பொதுவாகவே சேமிப்பு என்பது நடுத்தர மக்களின் பலரின் வாழ்க்கையில் கனவாகவே இருக்கிறது. நடுத்தர மக்கள் தங்களுடைய எதிர்காலத்தை நினைத்தும், குழந்தைகளை நினைத்தும் சேமித்து வைப்பார்கள். நடுத்தர மக்கள் சேமிப்பதற்காக சீட்டு போடுவது, மகளிர் குழுக்களில் பணம் சேமிப்பது, ஒருவரிடம் கொடுத்து வைப்பது என்று பல வகையில் சேமிப்பார்கள். ஆனால், அதில் பல வெற்றி அடைந்திருக்கிறது, சில தோல்வியும் அடைந்திருக்கிறது.

-விளம்பரம்-

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அரசாங்கம் நடுத்தர மக்களின் கனவை நனவாக்க பிபிஎஃப் என்ற சேமிப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளது. பிபிஎஃப் என்பது பப்ளிக் பிராவிடென்ட் பன்ட் திட்டம் ஆகும். மேலும், அரசாங்கத்தால் கொண்டு வரப்படும் சிறு சேமிப்பு திட்டங்கள் எல்லாம் 100% நம்பிக்கையானது. இதன் மூலம் ஏழை, எளிய நடுத்தர மக்கள் தங்களுடைய கனவை நனவாக்கலாம். ஓய்வு காலத்தை குறித்து கவலைப்படுபவர்கள், குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் வாழ்க்கை குறித்து நினைப்பவர்களுக்கும் இந்த திட்டம் ஒரு அருமையான வாய்ப்பாக உள்ளது.

- Advertisement -

வெளியில் பணத்தை சேமித்து வைத்து நஷ்டமடைவதற்கு பதில் இந்த திட்டம் மூலம் மக்களுக்கு அதிக அளவு லாபம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் முதலீடுகளுக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விலக்கம் செய்யப்பட்டுள்ளது. நடுத்தர மக்களுக்கு சாதாரணமாக ஆயிரக்கணக்கில் பணத்தை சேமித்து பார்ப்பதே அரிதான ஒன்று. இவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை சேர்த்து வைப்பார்கள் என்பது அவர்கள் வாழ்க்கையிலேயே நடக்காத ஒன்று என்று சொல்லலாம். அதற்காகத் தான் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் சாதாரண மக்களில் இருந்து எல்லோருக்கும் சமமான திட்டமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தான் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இது மொத்தமாக அல்லது வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதம் முதலீடு செய்யும் வாய்ப்பை கொடுத்துள்ளார்கள். தற்போது இருக்கும் 7.1 சதவீதம் வட்டி வருமான அளவை வைத்து கணக்கிடும்போது மாதம் 12,500 ரூபாய் அல்லது வருடம் 1.5 லட்சம் ரூபாய் தொகையை தொடர்ந்து செலுத்தி வந்தால் அதாவது 25 வருடம் முதலீடு செய்தால் நாம் 1,03,08,015 ரூபாய் பெற முடியும்.

-விளம்பரம்-

அவ்வளவு நாட்கள் எல்லாம் பண்ண முடியாது என்று நினைத்தாலே 15 வருடத்தில் கூட இந்த திட்டத்தை முடிக்கலாம். அப்போது நம் கையில் 40 லட்சம் ரூபாய் இருக்கும். மேலும், இந்த திட்டத்தை இரண்டு முறை நீடித்தாலும் அதாவது 25 வருடம் நாம் சேமிப்பதன் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம். நாம் வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் நமக்கு 25 வருடத்திற்கு 37.50 லட்சம் தான் கிடைக்கும். ஆனால், இந்த திட்டத்தின் மூலம் வட்டியோடு சேர்த்து நமக்கு 25 வருட முடிவில் ஒரு கோடி ரூபாய் தொகையை மொத்தமாக பெறலாம். இந்த திட்டம் மூலம் வருடத்திற்கு 1000 முதல் தொடங்கி லட்ச கணக்கில் சேமிக்கலாம்.

Everything About Public Provident Fund (PPF) Scheme - ArthaYantra

மேலும், ஓய்வு காலத்தில் சேமிக்க நினைப்பவர்களுக்கும் எதிர்காலம் குறித்து நினைத்து வருத்தப்படுபவர்களுக்காகவும் கொண்டு வந்த சூப்பரான திட்டம் தான் இந்த பப்ளிக் பிராவிடென்ட் பன்ட் திட்டம். இத்திட்டம் 15 ஆண்டுகால திட்டமாகவும் உள்ளது. அதை இரட்டிப்பாக 25 ஆண்டு கால திட்டமாகவும் நீட்டிக்கலாம். இந்த சேமிப்பு தொகையை அஞ்சலகம், பொதுத்துறை வங்கி, சில முன்னணி தனியார் வங்கிகள், ஆன்லைன் மூலம் கூட பதிவு செய்யலாம்.

மேலும், இந்த திட்டம் தொடங்கிய பிறகு நடுவில் ஏதாவது பணம் அவசரம் தேவைப்பட்டால் ஏழாவது ஆண்டில் பிபிஎப் கணக்கில் இருந்து ஒரு தொகையினை பெற்றுக்கொள்ளலாம். அதிலும் சில வங்கிகள் 5 ஆண்டுகளில் கூட பணம் எடுக்க அனுமதி அளிக்கின்றது.
இந்த அற்புதமான திட்டத்தின் மூலம் நடுத்தர மக்கள் பயன் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்து உள்ளது.

Advertisement