பிகில் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாநகரம் கைதி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி பாக்யராஜ், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் இளம் நடிகர் லல்லுவும் நடித்து வருகிறார்.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நடிகர் லல்லு, சென்னை 28 படத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். மேலும், 8 தோட்டாக்கள் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் லல்லு பின்னர் கெளதம் கார்த்திக் நடித்த “ரங்கூன் ” படத்தில் அத்தோ குமார் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த சர்க்கார் படத்திலும் நடித்திருந்த என்பது குறிபிடத்தக்கது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லல்லு, விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருந்தார். மேலும், அந்த பேட்டியின் போது நடிகர் லல்லு, நடிகர் விஜய் எப்படி சமூக வலைதளத்தில் வருவதற்கு முன்பாகவே தனது படத்தின் விமர்சனங்களை கேட்பார் என்பதை கூறியுள்ளார். அதில், இப்போது சோசியல் மீடியா என்று வந்த பிறகு அவருடைய படம் எப்படி இருக்குது என்பதை அவர்கள் நேரடியாக தெரிந்து கொள்கிறார்கள். ஆனால், இதற்கு முன்னால் ஒரு கட்டம் இருந்தது.

Advertisement

வீடியோவில் 18 : 05 நிமிடத்தில் பார்க்கவும்

Advertisement

அப்போது பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற எந்த ஒரு சமூக வலைதள ஊடகங்களும் கிடையாது. ஆனால், அப்போது வந்த படங்களின் விமர்சனம் எப்படி உங்களுக்கு கிடைக்கும் என்று நான் விஜய் அண்ணாவிடம் கேட்டேன். அப்போது, என்னுடைய படத்தை என் நண்பர்களை போய் தான் பார்க்க சொல்வேன். என்னால் போக அவர்கள் சென்று விட்டு எனக்கு போன் செய்து விடுவார்கள். நான் வீட்டில் இருந்தபடியே ஹெட் போன் போட்டுகொண்டு கேட்பேன்.

ரசிகர்கள் எந்த சீனில் எல்லாம் கை தட்டு கிறார்கள் என்பதை கேட்பேன். ஒருவேளை வேற மாதிரி சொன்னாங்கன்னா போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு படுத்துவிடுவேன் என்று என்னிடம் சொன்னார். அதை கேட்கும் போது எனக்கே ஒரு மாதிரி ஆகிடிச்சி. எத்தனை விஷயங்களை தாண்டி, அணைத்து சூழலுக்கு பொருந்தி போய் எந்த அளவிற்கு அவர்கள் ஒரு ஈடுபாடோடு இருந்துள்ளார்கள் என்று மெய் சிலிர்த்தபடி பேசியுள்ளார் லல்லு.

Advertisement