‘படத்த பாத்தீங்களா இல்லையா, வேதா ஒரு டான், மாடல் இல்ல’ – ஹரித்திக் ரோஷனின் லுக்கை கண்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
376
vikramvedha
- Advertisement -

விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரித்திக் ரோஷனின் லுக் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. சமீப காலமாகவே பல்வேறு தமிழ் திரைப்படங்கள் பாலிவுட்டில் ரீ – மேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்த ‘விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீ – மேக் பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் புஷ்கர் – காயத்ரி தம்பதிகள் இணைந்து இயக்கிய ‘விக்ரம் வேதா’ மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் தாதாவாக வேதா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், விக்ரம் என்ற போலீஸ் அதிகாரியாக மாதவனும் நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-

இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார், பிரேம், கதிர் என்று பலர் நடித்து இருந்தனர். வேதாளம் கதையில் எப்படி வேதாளம், விக்ரமாதித்தன் முதுகில் அமர்ந்து கேள்வி கேட்டு பின்னர் அவரிடம் இருந்தே பதிலை வரவைக்குமோ அதே போல தான் இந்த படத்தின் கதையில் வேதாவான விஜய் சேதுபதி, விக்ரமான மாதவனிடம் கேள்வி கேட்டு பின்னர் அவரே உண்மைகளை கண்டறிய செய்வார்.

- Advertisement -

விக்ரம் வேதா இந்தி ரீ மேக் :

மிகவும் வித்தயாசமான அமைக்கப்பட்டு இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் இந்தியிலும் ரீ – மேக் செய்யப்படுவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்த படத்தில் யார் விக்ரம் – வேதாவாக நடிக்கப் போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

வேதாவாக ஹரித்திக் ரோஷன் :

இப்படி ஒரு நிலையில் பல்வேறு பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, செப்டம்பர் 30, 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

கேலிக்கு உள்ளான ஹரித்திக் ரோஷனின் லுக் :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரித்திக் ரோஷனின் லுக்கின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதை கண்ட தமிழ் ரசிகர்கள் மிகுந்த அப்செட்டில் இருந்து வருகின்றனர். விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பெரிதும் விரும்பப்பட்டதற்கு காரணம் அவரின் லுக் தான். ஆனால், ஹரித்திக் ரோஷன் ஒரு மாடல் போல இந்த படத்தில் இருக்கிறார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழ் படங்களை டேமேஜ் செய்யும் இந்தி ரீ மேக்ஸ் :

விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீ மேக்கில் ஹரித்திக் ரோஷன் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான போது தமிழ் ரசிகர்கள் கூட மகிழ்ச்சியடைந்தனர். அதற்கு முக்கிய காரணமே சமீப காலமாக அக்ஷய் குமார் பல்வேரு தமிழ் படங்களின் இந்தி ரீ – மேக்கில் நடித்து அந்த படத்தின் ஒரிஜினலிடியை கெடுத்து வைத்து இருந்தார். சமீபத்தில் கூட ஜிகிர்ந்தண்டா படத்தில் இந்தி ரீ மேக்கில் அக்சய் குமார் நடித்து இருந்தார். அதன் ட்ரைலரை பார்த்து தமிழ் ரசிகர்கள் பலரும் பெரும் கேலி செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தலக்கத்து.

Advertisement