சமீப காலமாக திரை துறையில் இருக்கும் நடிகைகள் தங்களது வாழ்வில் நடந்த பாலியல் தொல்லைகளை குறித்து தைரியமாக பேசி வருகின்றனர். சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி சினிமாத்துறையில் நடிகைகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறிய கருத்தை தொடர்ந்து, பல்வேறு நடிகைகளும் இந்த விடயம் குறித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் “காலா” படத்தில் நடித்துள்ள நடிகையும் இந்த பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

Advertisement

இந்தியில் 2012 ஆம் ஆண்டு வெளியான அனுராக்கின் ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ மூலம் அறிமுகமானார் நடிகை ஹூமா குரேஷியும். அந்த படத்தின் இரண்டு பாகங்களிலும் ஹூமாவின் நடிப்பு பரவலாகப் பேசப்பட்டது. இத்தனைக்கும் படத்தில் ஹூமாவுக்கு சப்போர்ட்டிங் ரோல்தான். ஆனால், மோனிஷா கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்தார்.

இந்தியில் வெளியான தே இஷக்யா’, ‘பட்லபூர்’, ‘ஹைவே’ (மராத்தி) படங்களும் ஹூமாவுக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. குறிப்பாக, ‘பட்லபூர்’ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்ததற்கு நிறைய பாராட்டுகளைப் பெற்றார் ஹூமா. தற்போது முதன் முறையாக தமிழில் “காலா “படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் சிகப்பு கம்பல வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்குபெற்ற நடிகை ஹூமா குரேஷி “பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திறை துறையில் மட்டுமல்ல, எல்லா துறையிலும் தான் இருக்கிறது, இதுபோன்ற தொல்லைகளை பெண்கள் அட்ஜஸ்ட் செய்ய காரணம் அதிகாரத்தை பொறுத்து என்று தான் நான் நினைக்கிறேன். ” என்று கூறியுள்ளார்.

Advertisement