எங்க குழந்தைக்கு ‘S’என்ற எழுத்துலதான் பேர் வைப்போம்..! யார் தெரியுமா

0
2597
- Advertisement -

ஒரு டான்ஸ் மாஸ்டராக சாண்டியை நமக்கு நன்றாகத் தெரியும். அவர் மனைவி சில்வியா, தற்போது கர்ப்பமாக இருக்கிறார். குடும்பமே மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும் நிலையில் சில்வியாவிடம் பேசினோம்.

-விளம்பரம்-

sandy dancer

- Advertisement -

என் தங்கச்சிக்கு அவங்களை (சாண்டி) ரொம்ப பிடிக்கும். அவளுடைய பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பண்றதுக்காக அவரை கூப்பிட்டோம். அவரும் ‘என் ஃபேன்னு சொல்றீங்க. கண்டிப்பா வரே’னு சொன்னார். அவரைப் பார்த்ததும் என் தங்கச்சி சந்தோஷத்தில் அழுதுட்டா. அப்போவே அவரும் எங்க ஃபேமிலியும் குளோஸ் ஆகிட்டோம். அடிக்கடி வீட்டுக்கு வருவார். என் தங்கச்சி நல்லா டான்ஸ் ஆடுவாள். ரெண்டு பேரும் டான்ஸ் பற்றி நிறைய பேசிப்பாங்க. எனக்கோ அவர் சீன் போடுற மாதிரியே தெரிஞ்சது. அதனால், அவர்கிட்ட பேசவே மாட்டேன். அப்படியே பேசினாலும் அண்ணன்னுதான் பேசுவேன். அப்போ நான் பி.இ படிச்சுகிட்டிருந்தேன். நான் நல்லா படிக்கிற பொண்ணு. காதல் மேலே எல்லாம் விருப்பம் இல்லை.

நல்லா படிச்சு முனைவர் பட்டம் வாங்குறதுதான் விருப்பமா இருந்துச்சு. ஒருநாள் திடீர்னு அவர் என்னைக் காதலிக்கிறதா சொல்லிட்டார். எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலே. வீட்டுல சொன்னாலும் தப்பாகிடும். அப்புறம் நான் அவர்கிட்ட பேசவே இல்லே. அவரோ நான் பதில் சொல்லைன்னு என் அம்மாகிட்ட போய், `உங்க பொண்ணை பிடிச்சிருக்கு’னு சொல்லி பெண் கேட்டார். அம்மா என்கிட்ட பேசினாங்க. என் ஃபேமிலிக்கே அவரைப் பிடிச்சுப்போச்சு. சரின்னு நானும் ஓகே சொல்லிட்டேன்” என்கிற சில்வியா பேச்சில் காதல் மலர்கிறது.

-விளம்பரம்-

sandy master

அவரைத் திருமணம் செஞ்சுக்கிறதுக்கு முன்னாடியே, ‘எனக்கு படிக்கணும். படிச்சுட்டு வேலைக்குப் போவேன். என் கரியரை விட்டுக்கொடுக்க மாட்டேன்’னு சொல்லிட்டேன். அவரும் ‘உனக்கு என்ன விருப்பமோ அதைப் பண்ணும்மா’னு சொல்லிட்டார். திருமணமான ரெண்டாவது நாளே, எம்.இ படிக்க அட்மிஷன் போட்டேன். இப்போ, ஃபைனல் இயர் படிக்கிறேன்” என்றவர், தங்கள் வாழ்வில் நுழைந்திருக்கும் புதிய உயிர் பற்றி வெட்கத்துடனே பேசத் தொடங்கினார்.

”கர்ப்பமானதும் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. நான் காலேஜ் டாப்பர் வேறே. இதனால், படிப்பு பாதிக்கப்படுமோன்னு நினைச்சேன். ஆனால், என் கணவர் ஃபுல் சப்போர்ட்டா இருந்தார். கர்ப்பமா இருக்கும்போதும் பரீட்சை எழுத கூப்பிட்டுப் போனார். பரீட்சை முடிச்சுட்டு வர்ற வரைக்கும் வாசலிலேயே காத்திருந்தார். அந்தப் பரீட்சையிலும் நான்தான் முதல் மார்க். ‘இந்த நேரத்திலும் எப்படி படிப்பில் பின்னியெடுக்குறே’னு என் ஃப்ரண்ட்ஸ் ஆச்சர்யமா கேட்பாங்க. ‘என் கணவர் அவ்வளவு அன்பா பார்த்துக்கிறார். அதுதான் என் பூஸ்ட்’னு சொல்வேன்.

என் கணவரைப் பற்றி எதிர்மறை கருத்துகள் வந்தாலும், இயல்பில் ரொம்ப அன்பான மனிதர். வாங்கின சம்பளத்தை அப்படியே என்கிட்ட கொடுத்திடுவார். அவர் செலவுக்கே என்கிட்ட கேட்டுதான் வாங்குவார். இப்போ, நாங்க டான்ஸ் கிளாஸ் நடத்திட்டிருக்கோம். நான்தான் பிசினஸைப் பார்த்துக்கிறேன். அவர் சினிமாவுக்கு கோரியோகிராஃப் பண்ணிட்டிருக்கார். இந்தத் துறையில் ஏற்ற இறக்கம் எப்பவும் இருக்கும். நான் நல்லா படிச்சு டீச்சிங் புரொபஷனுக்கு போகணும்னு இருக்கேன். என்னால் முடிஞ்ச அளவுக்கு பைனான்ஷியலா அவருக்கு சப்போர்ட் பண்ண நினைக்கிறேன்” என்றவரிடம், இப்போ எத்தனையாவது மாதம் எனக் கேட்டதும் வெட்க புன்னகையை உதிர்க்கிறார்.

silviya

இன்றைக்கு காலையில் புராஜெக்ட் வைவா போய்ட்டுதாங்க வந்தேன். இப்போ எனக்கு ஒன்பதாவது மாதம் முடியப்போகுது. இன்னும் 15 நாளில் பாப்பா பிறந்திடும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. என் கணவர்தான் சாப்பாடு ஊட்டிவிடறது, வாக்கிங் கூப்பிட்டுப் போறதுன்னு பார்த்துப் பார்த்து பண்றார். எங்க ரெண்டு பேருடைய முதல் எழுத்தும் ‘S’. அதனால், எங்க பாப்பாவுக்கும் ‘எஸ்’ ஆரம்பிக்கும் எழுத்துலதான் பெயர் வைக்கப்போறோம். ஒரு சின்ன கஷ்டம்கூட தெரியாத அளவுக்கு அன்பா என்னைப் பார்த்துக்கும் கணவர்தான் என் முதல் குழந்தை” என்கிற சில்வியா முகத்தில் மிளிர்கிறது தாய்மை.

Advertisement