பிரியாணிக்காக கூடியவர்கள் அல்ல என் ரசிகர்கள். யாரை குத்திக்காட்டுகிறார் ஓவியா.!

0
817
oviya

பிக்பாஸ் புகழ் ஓவியா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மூன்று படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.அதில் ஒருபடமான ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 3ன் படபிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
oviyaஇந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் பல்வேறு ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டியளித்து வருகின்றனர்.மேலும் தங்களது அனுபவங்களை சமூகவலைத்தங்களான டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பதிந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஓவியா, “எனக்கு குவிந்த ரசிகர்கள் கூட்டம் நான் பிரியாணியோ காசோ கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல, என் மீதான அன்பில் தானாக சேர்ந்த ரசிகர்கள். மேலும் அவர் கூறுகையில் “எனக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் நான் தமிழ்நாட்டில் உள்ள எந்த வீட்டிலும் என்னால் தங்க முடியும். அந்த அளவுக்கு என்மீது மக்கள் அன்பு வைத்துள்ளார்கள்’ என்று கூறியுள்ளார்.

Image result for bigg boss oviya

யாரை மனதில் வைத்து அவர் இப்படி கூறினார் என்று தெரியவில்லை.தமிழக அரசியல் கட்சிகள் கூட்டும் கூட்டத்தை சாடியுள்ளாரா என்றும் தெரியவில்லை.

இதையும் படிங்க: மருத்துவ முத்தம் குறித்து மனம் திறந்த ஆரவ்!

ஆனால் அவர் கூறிய இந்த கருத்து ஓவியா ஆர்மியை மகிழ்ச்சியிலும்,தமிழக அரசியல் கட்சிகளுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.