நான் கர்பமா இருக்கேனா..? மா.கா.பா தான் காரணம் ! குடும்பத்தில் குழப்பம் ! பிரியங்கா வருத்தம்

0
2409
Priyanka Anchor

காமெடி இஸ் எ சீரியஸ் பிசினஸ்’ என்று சொல்லுவார்கள். அந்த காமெடியால் ஒருத்தரை கலாய்த்தும் சிரிக்க வைக்கலாம்; கலாய் வாங்கியும் சிரிக்க வைக்கலாம். இந்த இரண்டாவது கேட்டகிரிக்குப் பொருத்தமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. எவ்வளவு கலாய்த்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், காமெடியாகவே நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல். செம பிஸியாக இருந்தவரை சில கேள்விகளோடு தொடர்புகொண்டோம்.

Anchor priyanka

`நீங்க கர்ப்பமாக இருக்கீங்கன்னும் அதுனால சின்னத்திரையை விட்டுப் போறதாகவும் சொல்லிட்டு இருக்காங்க… அதுக்கெல்லாம் உங்களோட ரியாக்‌ஷன் என்ன..?
நானும் அந்தச் செய்திகளை எல்லாம் பார்த்தேன். அதுக்கான பதிலை ஷோலேயே சொன்னோம். எங்க ஷோல வழக்கமா ஒரு பாம்பு டான்ஸ் ஆடுவோம். ஒரு நாள் லன்ச் முடிச்சுட்டு ஷூட் போகும்போது, அந்த டான்ஸை ஆடச்சொன்னாங்க. ஃபுல்லா சாப்பிட்டதனால என்னால சரியா ஆட முடியாம, கொஞ்சம் பார்த்து, பார்த்து மெதுவா ஆடுனேன். அதை மா.கா.பா, ‘என்ன இது கர்ப்பமான பாம்பு ஆடுற மாதிரி இருக்கு’னு கலாய்ச்சார்.

அந்த லன்ச் தொப்பையை கர்ப்பம்னு நினைச்சுக்கிட்டு, பிரியங்கா கர்ப்பமா இருக்காங்கனு வீடியோ போட்டுடாங்க. அந்த வீடியோவைப் பார்த்து சில பேர், `எனக்கு வாழ்த்துச் சொல்லி எத்தனை மாசம்’னு கேட்டாங்க. என் கணவர்கிட்டேயும் இதையே கேட்டிருக்காங்க. அவரு ஷாக்காகி எனக்குப் போன் பண்ணி, ‘என்ன எல்லாரும் இப்படி சொல்றாங்க’னு எனக்கு போன் பண்ணி கேட்டார்.

priyanka

இப்படி அவங்க போடுற வீடியோ என்னையும் குடும்பத்தையும் பாதிக்கிது. அந்த வீடியோவைப் பார்த்து என் மாமனாருக்கெல்லாம் போன் பண்ணி கேட்டிருக்காங்க. நான் மீடியாவுல இருக்கேன்; என்னைப் பத்தி பேசுறீங்க. அதெல்லாம் ஓகே. ஆனால், அது என் குடும்பத்தையும் பாதிக்கிதுனு நினைக்கும்போது கஷ்டமா இருக்கு. இதை எப்படி எதுக்கிறதுனு தெரியலை.