அய்யோ… சத்தியமா கமிட்டாகல பாஸ்..! கோலமாவு கோகிலா படத்துல நான்…! ஜாக்குலின்

0
1416
Jaxcquline fernands
- Advertisement -

கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் தொடங்கி ஏழாவது சீசன் வரை இந்த நிகழ்ச்சியை ரக்‌ஷன், ஜாக்குலின் இருவரும் தொகுத்து வழங்கினார்கள். பிறரை கலாய்த்தும், தன்னை கலாய்ப்பதற்கு அசட்டுத்தனமாக சிரிப்பதும் என செம கலாய்யாக சென்று கொண்டிருந்த ஏழாவது சீசனின் ஃபைனல் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. அடுத்து என்னென்ன ஷோக்களில் கமிட்டாகியிருக்கிறார் என்பதை தெரிந்துக்கொள்ள ஜாக்குலினைத் தொடர்பு கொண்டோம்.

-விளம்பரம்-

jacqueline-fernandas

- Advertisement -

கோலமாவு கோகிலா’ படத்தில் உங்க ரோல் பற்றிச் சொல்லுங்க..? முதல் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருந்தது..?
நயன்தாரா மேடமுக்கு தங்கச்சி என்பதைத் தாண்டி என் ரோலைப் பற்றி இப்போ எதுவும் சொல்ல முடியாது. ஷூட்டிங் ஸ்பாட் செம ஜாலியா இருக்கும் ஜி. நயன்தாரா மேடம், சரண்யா மேடம் ரொம்ப நல்லா கேர் பண்ணிப்பாங்க. விஜய் டிவியில் இருந்த நெல்சன் அண்ணாதான் இந்தப் படத்தோட டைரக்டர். அதுனால ஸ்பாட்ல எனக்கு எந்த பதட்டமும் இல்லை. எதாவது சரியில்லைன்னா, அவரே பக்கத்துல வந்து சொல்லிக்கொடுத்துட்டு போவார். அதைப் அப்படியே பண்ணிடுவேன். அவரோட அசிஸ்டெண்ட்ஸ் எல்லாமே எனக்கு முன்னாடியே தெரிஞ்சவங்களா இருந்தனால ரொம்ப ஈசியா இருந்துச்சு.

நீங்க இப்போ சிங்கிள் இல்லையாமே… கமிட்டாகிட்டதா கேள்விப்பட்டோம்..?

-விளம்பரம்-

‘அய்யய்யோ… சத்தியமா நான் கமிட்டாகலை பாஸ். நானும் என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ஷாமும் இன்ஸ்டால எப்போதுமே அப்படித்தான் பேசிப்போம். அதைப் பார்த்தா யாருக்கோ அது லவ்னு ஃபீல் ஆகியிருக்கு. அதை வச்சு நிறைய மீம், வீடியோனு போட்டுட்டு இருக்காங்க. ரெண்டு பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் எப்படி இருப்பாங்களோ அப்படித்தான் நாங்க இருக்கோம்.

Jacqueline

நாங்க ரெண்டு பேரும் ஃபேமிலி லெவல்லையும் ஃப்ரெண்ட்ஸாகத்தான் இருக்கோம். இதுவரைக்கும் நான் எந்த பையனோட போட்டோக்கும் அப்படி கமெண்ட் பண்ணுனது இல்லை. அதுனாலக்கூட தப்பா புரிஞ்சுருக்கலாம். அப்பறம் இந்த மீம் வீடியோ போடும்போது கொஞ்சம் பார்த்து பண்ணுனா நல்லாயிருக்கும். ஏன்னா, ஒரு முறை நான் விஜய் டிவியை விட்டு வெளியேறிட்டேன்னு போட்டு விட்டுட்டாங்க. எனக்கு பக்குனு ஆகியிருச்சு.” என்ற ஜாக்குலின் அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தவாறே, ‘செலிபிரிட்டிக்கு இதெல்லாம் சாதரணம்தானே’ என்றுச் சொல்லிவிட்டு பறந்தார்.

Advertisement