நடனத்தில் பிரபலமான டாப் நடிகரையே தெரியாது என்று கூறியுள்ள ஷகீலா. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.

0
6728
shakila
- Advertisement -

சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார். இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர்.

-விளம்பரம்-

இவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மயங்காதவர்கள் இருக்க மாட்டார். இதனாலே ஷகிலா படங்களுக்கு திருவிழா போன்று கூட்டம் கூடும். சகிலா படம் ரிலீசாகும் என்றால் அங்கு சூப்பர் ஸ்டார்களின் படங்கள் கூட ஓடாது. அந்த அளவிற்கு சகிலா கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார். மேலும், இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி, தமிழ் என பல மொழிகளில் இவர் படங்களில் நடித்து உள்ளார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு கவர்ச்சி படங்களை கொடுத்து வந்தார். இதனால் இவருக்கு மலையாளத்தில் ரெக்கார்ட் போட்டு விட்டார்கள். இதனையடுத்து இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : சின்மயிக்கு ஆபாச மேசேஜ் அனுப்பிய இலங்கை மாணவன். புகைப்படம் மற்றும் ஸ்க்ரீன் ஷாட்டை வெளியிட்ட சின்மயி.

இந்நிலையில் நடிகை ஷகிலா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனை யாரென்று தெரியாது என்று கூறிய தகவல் சமூகவலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகை சகிலா அவர்கள் அப்ப அப்ப பேட்டிகள் கொடுத்து ரசிகர்களை குஷி செய்து வந்து கொண்டிருக்கின்றார். இது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் மலையாள சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தெலுங்கு திரை உலகில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுனை பற்றி தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இதனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அனைவரும் கடும் கோபத்தில் ஷகிலாவை கண்டபடி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வந்தனர். அதே நேரத்தில் ஷகிலா அவர்கள் மகேஷ் பாபு தனது சகோதரர் போன்றவர் என்றும், ஜூனியர் என்டிஆர் சிறப்பாக நடனம் ஆடுபவர் என்று கூறி இருந்தார். மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் அவர்களை தெரியும் போது எப்படி அல்லு அர்ஜுனை தெரியாமல் போனது என்றும் தாறுமாறாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதாக சமூகவலைதளங்களில் கூறப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கு, கன்னடம், இந்தி என மூன்று மொழிகளிலும் இயக்கப்போவதாக இந்திரஜித் லங்கேஜ் கூறியுள்ளார். 16 வயதில் சினிமாவில் நுழைந்த சகிலாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது என்றும் அறிவித்து உள்ளார்கள்.

Advertisement