தொடர்ந்து வரும் திமுக அமைச்சர்களின் வழக்குகள். முன்னதாக போக்குவரத்து துறையில் வேலைக்காக பணம் பெற்ற வழக்கில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார். அதன் பின் சில மாதங்களில் அமைச்சர் பொன்முடி மீது சென்மன் எடுத்த விவகாரத்தில் நீதிமன்றம் அவரை விடுவித்த நிலையில் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் அந்த வழக்கை தமாக முன் வந்து எடுத்துள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவரை நீதி மன்றம் விடுவித்த நிலையில் தற்போது அந்த வழக்கை பற்றி பேசிய நீதிபதி ஆனந்த வெங்கடேசன் “இந்த வழக்கின் தீர்ப்பை படித்து விட்டு நான் 3 நாட்கள் உறங்கவில்லை என்றும் கூறியிருந்தார்”.   

Advertisement

அமைச்சர்கள் வழக்கு:

கடந்த 2006முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த தங்கம் தன்னரசு மற்றும் கே கே எஸ்எஸ் ஆர். ராமச்சந்திரன் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது அப்போது. தங்கம் தென்னரசு மற்றும் அவரது குடும்பத்தினரம் 76.40லட்சம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், KKSSR ராமசந்திரன் மற்றும் அவர் குடுமபத்தினர் மீதும் 44.56 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் இது தொடர்பான வழக்குகள் 2012 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இதில் தங்களை விடுவிக்க கோரி அவர்கள் சார்பிலும் அவரது குடும்பத்தினர்கள் சார்பிலும் மனு அளிக்கப்பட்டது. அந்த வழக்குகளை ஏற்றுக் கொண்டு கீழமை நீதிமன்றம் இந்த வழக்குகளில் இருந்து இவர்கள் இருவரையும் விடுவித்தது. இந்த உத்தரவு எதிர்த்து லட்ச ஒழிப்பு துறை மேல் முறையீடு செய்யாத நிலையில் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார்.

Advertisement

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்பு இன்று (புதன் கிழமை) விசாரணைக்கு வந்தது.

Advertisement

இந்த தீர்ப்பை யாரும் இதுவரை மேல் முறையீடு  செய்யாத வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன்வந்து அந்த வாழ்க்கை  விசாரணைக்கு எடுத்துள்ளார்.  அமைச்சர் பொன்முடி வழக்கை தாமாக முன்வந்து சாரணைக்கு எடுத்த நிலையில் தற்போது மேலும் இரண்டு அமைச்சர்கள் மீதான வழக்குகளையும் ஆனந்த வெங்கடேசன்  விசாரணைக்கு எடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அன்பு அமைச்சர்கள் மீதான வழக்கு நாளைய விசாரணைக்கு வருகிறது.

நீதிபதி கருத்து:

நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதாலேயே தாமாக முன் வந்து விசாரணை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் 2021 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தங்களது நிலைபாட்டை மாற்றிகொள்வது காண முடிகிறது. அதிகாரத்துக்கு யார் வந்தாலும் அந்த அதிகாரத்தை நீர்த்துப்போகவேச் செய்கிறார்கள்.

சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும் விதம் உண்மையாகவே அதிர்ச்சியளிக்கிறது என்றும் இந்த வழக்கில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Advertisement