விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்று இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் விஜய் சாதாரணமான உடையில் வந்திருந்தார். ஆனால் மற்ற படக்குழுவினர் நன்றாக தங்களை அழகுபடுத்திக் கொண்டு வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து முடிவடைந்த நிலையில் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இருந்தது இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்துவிட்டு விஜய்யின் தோற்றம் குறித்து இசையமைப்பாளரும் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் நடிகர் விஜய்யை பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அந்த பதிவில் வாரிசு’ பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது.

Advertisement

தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது.அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர்கள் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள் இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன்.

நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே?ஒரு இடத்துக்கும் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது.தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

Advertisement

என்று விஜய்யின் தோற்றம் குறித்து பேசிய ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி ஜேம்ஸ் வசந்தன் அவர்களை கடுமையாக விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் குறியாதவது “நான் அந்த முறைகேடுகள் அனைத்தையும் எதிர்பார்த்தேன். “விஜய் போன்ற ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்திற்கு எதிராக என்னை தவிர வேறு யாரும் எழுத மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.

Advertisement

ஆனால் அதை சொல்லியாக வேண்டும் என்று எனக்கு அவசியமாக தோன்றியது. விஜய்யை பற்றி கருத்து தெரிவித்தால் என்னை அவருடைய ரசிகர்கள் என்னை தாக்குவார்கள் என்பது எனக்கு தெரியாதா? ஆனால் அதை பற்றி பேச வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டதாக உணர்ந்தேன். மேலும் நான் ஏப்போதுமே என்னை தாக்கும் குற்றங்களுக்கு நான் பயந்ததில்லை. இப்படி இருந்ததினால் தான் என்னால் 27 வருடங்கள் சினிமாவில் நிலைத்திருக்க முடிந்தது என்று கூறினார் இசையமைப்பாளரும் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன்.

Advertisement