பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறாங்க?"
``ஒருத்தவங்களை பிடிச்சிருந்ததுனா மக்கள் எப்படி அவங்களைக் கொண்டாடுவாங்கனு இந்த நிகழ்ச்சி மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு நிறைய பாராட்டுகள் பெண்கள்கிட்ட இருந்து வந்தது. குறிப்பா, `எங்க வீட்டுப் பொண்ணு மாதிரியே இருக்க'னு சொல்லும்போது கிடைச்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. `கல்யாணத்துக்குப் பிறகு பெண்களுக்கு வாழ்க்கையே முடிஞ்சுபோகும்னு நினைச்சோம். நீங்க அதை முறியடிச்சுட்டீங்க!'னு சிலபேர் சொன்னாங்க."
#MeToo பத்தி உங்க கருத்து?"
``ட்விட்டர்ல இது குறித்துப் பலரும் குரல் எழுப்புறது தப்பில்லை. சமூக வலைதளத்துல பிரச்னையை வெளிப்படுத்துறது மூலமா நமக்கு ஆதரவு கிடைக்கும். மேலும், புகாரை போலீஸுக்கு எடுத்துக்கிட்டு போறது இன்னும் சரியான முடிவா இருக்கும். தவிர, இந்த விஷயம் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் நடந்துக்கிட்டுதான் இருக்கு.
கேட்கிற இடத்துல இருக்கிறவங்க தப்புனா, அதுக்கு ஒப்புக்கிட்டு கொடுக்குற இடத்துல இருக்குறவங்ககிட்டேயும் தவறு இருக்கத்தான் செய்யுது. எனக்கும் இந்த விஷயம் நடந்திருக்கு. யாரும் கழுத்துல கத்தி வெச்சு, `நீ இதைப் பண்ணியே ஆகணும்'னு வற்புறுத்தப் போறதில்லை. எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு!"




