சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டு வருபர்களுக்கு ரூபாய் 10கோடி அளிக்கபடும் என்று அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் கூறியிருந்தார். அதற்கு சீமான் அந்த சாமியாரின் தலையை கொண்டு வருபருக்கு நான் 100கோடி ரூபாய் அளிக்கிறேன் என்று கூறியிருந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் வட்டாரங்கள் மிகவும் பரப்பரப்பாக இருந்து வருகிறது. இதில் ஒரு தரப்பினர் அவர்களுடைய கருத்து கூற அதற்க்கு எதிரணியில் இருப்பவர் மற்றொரு கருத்தை கூற என பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தர்மாவை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

உதயநிதி பேசியது:

சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும் அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்றால் என்ன அதன் பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது மாற்றமுடியாதது, யாரும் கேள்வி கேட்க்க முடியாது என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க்க வேண்டும் என்பது தான் இந்த கமினியூஸ்ட் இயக்கமும் இந்த திமுக இயக்கமும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கேலி செய்யும் வகையில் ஒரு செய்தி தாளில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது.

Advertisement

அதற்க்கு தான் நீட் போன்ற தேர்வுகளை 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதிசன் வரை 21 மாணவர்களை நாம் பலி கொடுத்து இருக்கிறோம். மருத்துவ கட்டமைப்பில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருந்து வருகிறோம். இது வரை இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவர்களை உருவாக்கியது தான் தமிழ்நாடு. ஆனால் அதை சிதைக்கவேண்டும் என்று கொண்டு வந்தது தான் நீட் தேர்வு. சிலருக்கு நிச்சயம் வயிற்று எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். இந்த மாநாடுகளை தொடர்ந்து நடத்த வேண்டும் இங்கு பேசிவிட்டு அனைவரும் கலைந்து விடக் கூடாது. இங்கு பேசிய கருத்துகளை பொது மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். என்றும் அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார்.

சீமான் கூறியது:

நான் கூட சொல்கிறேன் அந்த சாமியாரின் தலையை கொண்டு  வருபவருக்கு நூறு கோடியை தருகிறேன். ஒரு சாமியார் என்பவர் அனைத்தையும் சுரந்து பற்றட்டவராக இருக்க வேண்டும். சாந்தமாகவே உருவானவர் தானே சாமியார்.  நீ ஏதோ அவனுடைய தலையை கொண்டுவானாக அறுத்துவார் என்று கறிக்கடையில  வேலை செய்பவர்கள் கூறுகிறார். நீ என்ன சாமியார்? நீ ஒரு ரவுடி பையன். தம்பி உதயநிதி கருத்து சொன்னால் நீயும் கருத்துடன் மோது அதுதாண்டா ஜனநாயகம்.

Advertisement

இந்தக் கருத்தை நான் உடன்படவில்லை என்றால் கருத்துடன் மோதி இருக்க வேண்டும். எனக்கு பிறப்பின் அடிப்படையில் பேசும் இருக்கிறது.  மனிதனின் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இருக்கின்றான் என்று நீ பேசு. இது போன்ற கருத்துக்கள் நான் உடன்படவில்லை. மானுடப் பிறப்பில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பாகுபாடு பார்ப்பவன் அனைவரும் என்னுடைய எதிரிதான்.என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார்.  

Advertisement
Advertisement