தேசிய விருதை வாங்க மாட்டேன் – விஜய் சேதுபதி அதிரடி

0
1837
vijay-sethupathi

விஜய்சேதுபதி நடித்து பன்னீர்செல்வம் இயக்கி திரைக்கு வரவுள்ள படம் கருப்பன். இந்தப்படம் இந்த மாத இறுதியில் வெளிவரவுள்ளது. இந்தப்படத்தின் ப்ரமோஷன் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு தற்போதைய சூழலில் மத்திய அரசு எனக்கு விருதளித்தால் அந்த விருதை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

Related image

- Advertisement -

மேலும் பேசிய விஜய் சேதுபதி “விக்ரம் வேதா” படத்தில் நடிக்கும் போது, அந்த கதாபாத்திரத்தில் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா என்ற பதட்டம் இருந்தது. ஆனால், கருப்பன் படத்தை பொறுத்த வரை எனக்கு அந்த பதட்டம் இல்லை. ஏனெனில் இது மண் சார்ந்த கதை. இதில் ஒரு மாடு பிடி வீரனாக நடித்துள்ளேன். மேலும், கணவன், மனைவிக்கு இடையே உள்ள அன்பை இப்படம் பேசும் என்று கூறியுள்ளார்.

Related image

-விளம்பரம்-

நீட் தொடர்பான பிரச்சனையில் அனிதா தற்கொலை செய்துகொள்ள மத்தியஅரசுமே ஒரு காரணம் எனவே விஜய்சேதுபதி மத்தியஅரசின் மீது இருக்கும் கோபத்தின் காரணமாகவே விருதளித்தால் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.

Advertisement