இன்னொரு வாய்ப்பு வந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன்..! பிந்து மாதவி அதிரடி முடிவு.! ஏன் தெரியுமா..?

0
1705
- Advertisement -

பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே போனதுதான் வாழ்க்கையில மறக்க முடியாத அனுபவம். என்னை நிறைய மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததும் இந்த நிகழ்ச்சிதான். இப்ப வாழ்க்கை சூப்பரா போய்ட்டு இருக்கு!” – ‘பிக் பாஸ்’ பிந்து மாதவியின் பேச்சில் சந்தோஷம் தெரிகிறது. வைல்ட் கார்ட் ரவுண்டு மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்த பிந்து மாதவி அந்த வீட்டில் அதிக நாள்கள் இருந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். `பிக் பாஸ்’ சீஸன் 2 எப்படி இருக்கும், அதன் போட்டியாளர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை உட்பட பல கேள்விகளுடன் பிந்துமாதவியைச் சந்தித்தேன்.

-விளம்பரம்-

indhu-Madhavi

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தினமும் டிவியில பார்க்கும்போதெல்லாம், ‘நாமும் அந்த வீட்டுக்குள்ள ஒரு போட்டியாளரா போகணும்’னு நினைச்சதே இல்லை. அந்த நிகழ்ச்சியில கலந்துக்குறதுக்கு மூணு நாளைக்கு முன்தான் விஜய் டிவி தரப்புல இருந்து எனக்கு போன் வந்துச்சு. ‘நிகழ்ச்சியில கலந்துக்க முடியுமா’னு அவங்க கேட்டப்போ, ‘முடியாது’னு மறுத்துட்டேன்.

ஏன்னா, அந்த வீட்ல இருந்த பலரும் சண்டை போட்டுட்டுதான் இருந்தாங்க. அதனால அவங்க நமக்கு செட் ஆவாங்களா, நல்லா பழகுவாங்களானு பெரிய பயம் இருந்தது. தவிர, வீட்டுக்குள்ள போனா தமிழ்ல பேசணும். எனக்கு தமிழ் சரியா பேச வராது. தமிழில் பேசுறது ரொம்ப கஷ்டம். அதனால யோசிச்சேன். அந்த வீட்டுக்குள்ளே போறதுக்கு மூணு மணி நேரத்துக்கு முன்வரை கேரவனுக்குள்ள உட்கார்ந்து ‘பிக் பாஸ்’ எபிசோடைத்தான் பார்த்துட்டு இருந்தேன். ‘உள்ளப் போவோமா… இல்ல இப்படியே வீட்டுக்குப் போயிடலாமா”னு பெரிய பயம் இருந்தது. ஆனால், தொடர்ந்து என்கிட்ட விஜய் டிவி கேட்டுகிட்டதால, ‘ஓகே போய்தான் பார்ப்போமே’னு தோணுச்சு. அதனாலதான் போனேன்.

-விளம்பரம்-

bindhu madhavi actres

வீட்டுக்குள்ளப் போன இரண்டாவது வாரத்திலேயே எல்லார்கூடவும் நல்லா பேசிப் பழக ஆரம்பிச்சிட்டேன். அவங்களும் என்கிட்ட நல்லா பழகினாங்க.முக்கியமா நல்லா தமிழ் பேசவும் கத்துக்கிட்டேன். சென்னையில் இருந்து கத்துக்க முடியாத தமிழை ‘பிக் பாஸ்’ வீடு சுலபமா கத்துக்கொடுத்துச்சு. இந்த வீட்டுக்குள்ள இருந்த யாரும் என் நண்பர்கள் கிடையாது. அப்பப்ப கலைநிகழ்ச்சிகள்ல பார்த்திருக்கேன். ஓவியாகூட நிறைய பேசினது கிடையாது.

சமைக்கிறது, வீட்டை சுத்தமா வச்சுக்கிறதுனு ‘பிக்பாஸ்’ வீடு எனக்கு நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்துச்சு. எல்லார் கூடவும் நல்லா பழக்குற வாய்ப்பை எனக்கு இந்த வீடு ஏற்பாடு பண்ணிக் கொடுத்துச்சு. ஆனாலும் ஆரவ், ஹரீஸ், வையாபுரி அண்ணா இவங்க மூவரும்தான் என் ஆல்டைம் ஃபேவரைட். இவங்ககூட இன்னமும் நான் பேசிட்டுதான் இருக்கேன். ஆனா வாழ்க்கையில ஒருமுறை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே இருந்தாச்சு. நல்லா என்ஜாய் பண்ணியாச்சு. அதுபோதும். நெவர்… இன்னொரு தடவை அது நடக்காது! இன்னொரு வாய்ப்பு வந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன். ஆனா, எப்போவாது கெஸ்ட் மாதிரி கூப்பிட்டா போகலாம். `பிக் பாஸ் 2′-வில் கலந்துகுறவங்க யாராயிருந்தாலும் நீங்க நீங்களா இருங்க. கண்டிப்பா ஜெயிப்பீங்க” என்கிறார்.

Bigg-Boss-Tamil-Bindu-Madhavi

பிந்து மாதவி தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி எனும் நான்’ என்ற படத்தில் அருள்நிதியின் ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். “இது அரசியல் படம். அருள்நிதி எனக்கு நல்ல நண்பர். இந்தப் படத்தோட ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிஞ்சிருக்கு. ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயார் ஆகுற பெண்ணா நடிக்கிறேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் படமா இருக்கும்” என்கிறார்.

Advertisement