அட கடவுளே, அறிகுறியே இல்லாமல் அவெஞ்சர்ஸ் பட நடிகருக்கு வந்த கொரோனா.

0
806
- Advertisement -

உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது என்று ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இது உலகில் பல இடங்களில் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கவலையில் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image result for idris elba

- Advertisement -

இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த கரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள்.

இதையும் பாருங்க : விஜய் சேதுபதி மேடையில் அனைவரையும் கலாய்த்து இருப்பதற்கு காரணம் – மிர்ச்சி விஜய் பேட்டி.

-விளம்பரம்-

மேலும், கரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள். இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் அவெஞ்சர் பட நடிகர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

தற்போது இந்த தகவல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹாலிவுட்டில் படமாக்கப்பட்ட அவெஞ்சர்ஸ் படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டார்கள். அவேஞ்சர்ஸ் படத்தை ஹாலிவுட் மட்டுமில்லாமல் பல மொழிகளில் உள்ள ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. அவ்வளவு சீக்கிரம் யாரும் அவெஞ்சர்ஸ் படத்தை மறக்க மாட்டார்கள்.

அந்த சூப்பர் ஹீரோக்கள் நம் ரியல் வாழ்க்கையில் வந்துவிட மாட்டார்களா என்று பல பேர் ஏங்கி உள்ளார்கள். அந்த அளவிற்கு அவெஞ்சர்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த பல சூப்பர் ஹீரோக்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காமல் இடம் பிடித்து உள்ளார்கள். இந்நிலையில் அவெஞ்சர்ஸ் மற்றும் தோர் படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் Idris Elba அவர்கள் இன்று குரானா டெஸ்ட் எடுத்து உள்ளார்.

Image result for idris elba avangers

இந்த டெஸ்ட்டில் இவருக்கு பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் அனைவரையும் கவலையிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. மேலும், ரசிகர்கள் சோசியல் மீடியாவில் நடிகர் Idris Elba அவர்களுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் அவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement