விஜய் சேதுபதி மேடையில் அனைவரையும் கலாய்த்து இருப்பதற்கு காரணம் – மிர்ச்சி விஜய் பேட்டி.

0
2604
Mirchivijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

-விளம்பரம்-
Image result for master audio launch

- Advertisement -

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி இருந்தது. இந்த பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இதையும் பாருங்க : தலைலயே அடிச்சிக்கிச்சி. நான் பயந்து ஓடியாந்துட்ட – நிஷாவின் மாமியார் ஷேரிங்.

-விளம்பரம்-

இந்நிலையில் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு தான் ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த விழாவில் விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ், சாந்தனு, சேத்தன்,கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ், ஷோபா, சந்திரசேகர், அனிருத் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் அவர்கள் நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார்.

பாவனா - ஆர்ஜே விஜய்

விஜய் அவர்கள் வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை அவருடைய உடை முறை மாறுபட்டு இருந்தது. அது குறித்து கேட்டதற்கு என்னுடைய நண்பர் அஜித்தை போல் வரலாம் என்று வந்தேன் என்றும் கூறியிருந்தார். இசை வெளியீட்டு விழா முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் மாஸ்டர் படம் குறித்த பேச்சுக்கள் போய்க் கொண்டு தான் இருக்கின்றன. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஆர்ஜே விஜய்யும், தொகுப்பாளினி பாவனாவும் நடத்தினார்கள்.

இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ஆர்ஜே விஜயிடம் கேட்டபோது அவர் கூறியது, விஜய் படத்துக்காக இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னால் மறக்க முடியாது. இசை வெளியீட்டு விழாவில் யாரை பண்ண வேண்டும் என பெரிய டிஸ்கஷன் போய் இருந்தது. அதில் என்னுடைய பெயர் இருக்கிறது என்று சொன்னவுடன் எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்த மாதிரி பெரிய படங்களுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது எனக்கு இதுதான் முதல் முறை. இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி அண்ணா சூப்பராக பேசினார்.

Image result for mirchi vijay

அவர் அன்னைக்கு மேடையில் அனைவரையும் கலாய்த்து இருப்பதற்கு காரணம் அவர் ஜாலியான மூடில் இருந்தது தான் சொல்லணும். அவர் மேடையேறிய ஸ்டைலை பார்க்கும்போதே தெரியும் இன்னிக்கு செம கவுண்டுகள் கிடைக்கப் போவது என்று நாங்கள் நினைத்தோம். மனதில் தோன்றிய எல்லா விசயங்களையும் பேசி எல்லாரையும் கலாய்த்து பண்ணிட்டாரு. விஜய் சார் அழகா இருக்கிங்க என்று கேட்டவுடன் நான் விஜய் சேதுபதி அண்ணாவுக்கும் கிளோசப் வையுங்கள் என்று அவரிடம் சொன்னேன். இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி என்ன ஜாலியா கலாய்ப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

Advertisement