ஏ.ஆர்.ரகுமானை சந்தித்த இளையராஜா, கோரிக்கை வைத்த ரகுமான்- இளையராஜாவின் பதில் என்னன்னு தெரியுமா?

0
676
Arr
- Advertisement -

ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட இளையராஜாவின் பதிவு சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். மேலும், ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும், அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர். தற்போது உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதோடு ஏ ஆர் ரஹ்மான் அந்த காலத்திலேயே நவீன இசை கருவிகளை பயன்படுத்தி இளசுகளை தன் பக்கம் ஈர்த்தார். மேலும், ஏ ஆர் ரஹ்மான் பிறப்பால் ஒரு இந்து. இவரது இயற் பெயர் திலீப் குமார். பின் 20 வயதில் தன் தந்தையின் இறப்பிற்கு பின்னர் முஸ்லிமாக மாறினார்.

- Advertisement -

ஏ.ஆர்.ரகுமான் பற்றிய தகவல்:

அதற்கு முக்கிய காரணம் அவரின் தாய் தான். முஸ்லிமாக மாறிய பின்னர் முஸ்லீம் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார் ரகுமான். இவர்களுக்கு அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் என்ற இரு மகளும் உள்ளனர். இவரின் மகளுக்கு சமீபத்தில் தான் திருணம் நடந்தது. இப்படி குடும்பம், கேரியர் என்று இரண்டையும் பேலன்ஸ் செய்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். அதுமட்டுமில்லாமல் இப்ப இருக்கிற இசை இளைஞர்களுக்கு ஏ ஆர் ரகுமான் தான் வாத்தியார் என்று சொல்லலாம்.

ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவிற்கு வருகை தந்த இளையராஜா:

இந்நிலையில் ஏ ஆர் ரகுமான், இசைஞானி இளையராஜா சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், மார்ச் 5ஆம் தேதி உலகின் மிகப்பெரிய கலாச்சார கூட்டமான எக்ஸ்போ 2020 துபாயில் நடந்தது. இதில் இளையராஜா பங்கேற்றார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இளையராஜா துபாயில் உள்ள ஏ.ஆர்.ரகுமான் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவிற்கு வருகை தந்து இருக்கிறார். அப்போது இளையராஜாவுடன் ஏ ஆர் ரகுமான் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஏ.ஆர்.ரகுமானின் பதிவு:

அதை தான் ரகுமான் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கூறியிருப்பது, எங்கள் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவிருக்கு மேஸ்ட்ரோ இளையராஜா அவரை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் எங்கள் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவில் அவர் ஒன்றை இசையமைப்பார் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட புகைப்படமும் பதிவும் சோஷியல் மீடியாவில் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களையும் லைக்குகளையும் அள்ளி குவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இன்று இளையராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ ஆர் ரகுமான் வைத்த கோரிக்கையை ஏற்கபட்டுள்ளதாக பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.

இளையராஜாவின் பதில் பதிவு:

அதில் அவர், கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசை அமைக்க தொடங்குவோம் என்று ரகுமானுக்கு பதில் டீவ்ட் போட்டு இருக்கிறார் இளையராஜா. இவர்கள் இருவரின் நட்பு குறித்து ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் உறைந்து போய் உள்ளார்கள். இளையராஜா, ரகுமானின் தந்தை சேகர் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதேபோல இளையராஜாவுக்கு ரகுமான் பல பாடல்கள் பல படங்களில் கீபோர்டிஸ்ட்டாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement